உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாபஸ் 41 குற்: அப்படிச் சொல்வது சரியா? இன்னும ஜன சமு தாயம் அந்தக் காலத்திலே நீதி என்று எவைகளை நம்பி னார்களோ அவைகளையேதானே இன்றும் நம்புகிறார்கள். அந்தக் காலத்திலே அரசமரத்தைச் சுற்றி வந்தால் கர்ப்பம் தரிக்கும் என்று தாய்மார்கள் எண்ணி வந்தார்கள். இன்றும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு தினம் தங்கள் மனைவியார் சுற்றுவதை நான் பார்த்தேன். (கோர்ட்டில் சிரிப்பு] பக்தியைக் கேலி செய்யாதீர்கள். நமது நீதிபதி எவ்வளவு அறிவாளி! படித்தவர்! அரசமரத்தைச் சுற்றுவது சிரிப்புக் கிடமானதானால், ஐயா, அம்மாவைத் தடுத்திருப்பார்க ளல்லவா? நான் எவ்வளவோ, பெரிய பெரிய உத்யோகஸ் தர் வீட்டுத் தாய்மார்களை அந்த அரசமரத்தண்டை பார்த் திருக்கிறேன். மா: உன் புராணப் பிரசங்கம் போதும். குற்: ஐயா! என் பேச்சை நிறுத்தும்படிக் கட்டளையிடு வது போல நாட்டிலே நடைபெறும் புராணப் பேச்சை நிறுத் தியிருந்தால், நான் இன்று கள்ளன் என்று குற்றம் சாட்டப் பட்டுத் தங்கள் முன் நிறுத்தப்பட்டிருக்க மாட்டேன். மா: யார் உன்னைத் திருடச் சொன்னது? குற்: பக்தி எனும் உணர்ச்சி. மா: திருடக்கூடச் சொல்கிறதா? குற்: கற்பூரத்தை ஏழை பக்தனான நான் திருடினேன். வழிப்பறிக் கொள்ளை நடத்தினார் திருமங்கை ஆழ்வார், பக்திக்காக. வா.வ: இந்தக் காலத்தில் யாராவது செய்தால் 395- வது செக்ஷன்படி தண்டனை! குற்: அந்தக் காலத்து நீதி இந்தக் காலத்துக்குச் செல் லாது என்றால் நாட்டை ஆளும் நீங்கள், அந்தக் காலத்து நீதியைப் போதிக்கும் பழைய புராணங்களை மக்களுக்குப்