உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வழக்கு போதிக்கக்கூடாது; போதிப்பது சட்ட விரோதம் என்று தடுத்திருக்க வேண்டும். தங்குதடையின்றி பழைய நீதிக ளைப் போதிக்கும் புராணப் பிரசாரம், பாட்டாகவும், கூத் தாகவும் நாட்டிலே நடப்பதால், இதை அனுமதிக்கும் சர்க் காரும், பழையகால நீதியையே இன்றும் போற்றுகிறார் கள் என்று நான் நம்பினேன். மா: அது உன்னுடைய பைத்யக்காரத்தனம். குற்: இந்த ஒரு விஷயத்துக்காகவே என்னைப் பைத் யக்காரன் என்று கூறுகிறீர். அந்தக் காலத்து வேப்பமரத் துக்கு இன்றும் தங்களுக்குள்ளதைவிட அதிகாரம் அதிகம். அன்று போலவே இன்றும் கருடனும் குரங்கும் தெய்வங்க ளாக உள்ளன. அப்படியிருக்கத் தாங்கள் அந்தக் காலத்து நீதிவேறு இன்று வேறு என்று எப்படிச் சொல்லலாம்? அந்தக் காலத்து நீதி கூடாது என்றால், அவைகளை நம்பும்படிச் செய்யும் புராணப் பிரசங்கம் நிறுத்தப்பட வேண்டும். கோர்ட்டை நோக்கி] என்னமோ உளறுகிறேன் என்று நினைக்கிறீர்கள். போன மாதம், என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டிலே குடி யிருந்து வந்த பத்மா, ஏழு வருஷக் கடுங்காவல் தண்டனை பெற்றாள். தன் குழந்தையைக் கிணற்றிலே போட்டுக் கொன்றுவிட்டுத் தானும் விழுந்து இறக்கப்போகையில் அவள் பிடிப்பட்டுக் கோர்ட்டிலே நிறுத்தப்பட்டுத் தண்டனை தரப் பட்டது. பத்மா ஏழை! குழந்தையும் தானும் வாழமுடியாத அளவு வறுமை. பலதடவை அவள் நல்லதங்காள் கதையைக் கேட்டிருக்கிறாள்! கூத்தாகப் பார்த்துமிருக்கிறாள். வறுமை யின் கொடுமை அதிகமானதும், அப்படிப்பட்ட நல்லதங் காளே ஏழ்மை நிலை வந்தபோது ஏழு பிள்ளைகளை கிணற் றிலே தள்ளிவிட்டுத் தானும் விழுந்து செத்தாளே, அவள் அல்லவா பத்தினி, உத்தமி! அவளைப் போல நாமும் செய்ய வேண்டியதுதான் என்று தீர்மானித்தாள். ஏழு வருஷய் தண்டித்து விட்டார்கள். ஐயா! தான்பெற்ற குழந்தையைக் கொன்றாள் பத்மா. ஆனால்அந்தக் கொலைக்குத் தூண்டுதல்