உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாபஸ் 43 செய்தது புராணம். சதி செய்தும் உடந்தையாகவுமிருந்தது சமூகம். அதற்குத் தண்டனைதர, தர்மப் பிரபுக்களுக்குத் தோன்றவில்லை. மா: சுற்றி வளைத்துப் பேசவேண்டாம். சுருக்கமாகக் கூறிமுடி. குற்: நான் கள்ளனல்ல; பக்தன்! பக்தியால் தூண்டப் பட்டவர்கள், களவு மட்டுமல்ல. எது செய்தாலும், மன்னிக் கப்படுவார்கள்; மன்னிப்புக் கிடைப்பது மட்டுமல்ல- மேன்மை அடைவார்கள், இகத்திலே மட்டுமல்ல, பரலோகத்திலும் என்று என்னை நம்பும்படிச் செய்த புராணப் பிரசங்கி, சாமியாடி, அந்தப் புராணப் பிரசங்கத்தை ஏற்பாடு செய்த செட்டியார் ஆகியோர் நான் குற்றம் செய்ததற்குத் தூண் டிய குற்றத்துக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கும் எனக்கும் சேர்த்து தண்டனை தாருங்கள்; நீதியின்படி நடக்க வேண்டு மானால் அவர்கள் குற்றமற்றவர்களானால், நானும் நிர பராதியே. (கோர்ட் இடைவேளைக்குக் கலைகிறது.) கோர்ட் கட்டடத்தில், மாஜிஸ்ட்ரேட் அறை.] [மா. வா.வ.) மா: சார்! அவன் சொன்னதிலே நியாயம் இருக்கிறது. உண்மையிலேயே, பக்தியின் பெயரால் நடந்திருக்கிற அக் ரமங்கள் ஏராளம். என்ன காரணத்தாலோ அவர்களெல் லாம் பக்திமான்கள் என்று கொண்டாடப்படுகிறார்கள், அவன் சொன்னதுபோல, மாணிக்கவாசகரும் இராமதாசரும் பிறர் சொத்தை எடுத்துத் தமது பக்தியைக் காட்டச் செல விட்டது, எப்படித் தர்மமாகும்? எப்படி நியாயமாகும்? கற்பூரம் திருடியவனுக்கு நாம் செக்ஷன் தேடுகிறோம்! வா . வ : பழைய காலத்திலே, பக்தியின் பெயரால் ஏதேதோ நடந்தது. என்ன செய்வது? மா: பழைய காலத்திலே நடந்த அந்தச் சனியன்கள் இன்றும் நமது மக்களைப் பிடித்து ஆட்டுகிறதே. பாருங்கள்