உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வழக்கு சார்! அவன் சொன்னானே நம் வீட்டிலே அரசமரம் சுற்றி னார்கள் என்று. எனக்கு அவன் அதைச் சொல்லும்போது, வெட்கம் தாங்கமுடியவில்லை. என்ன செய்வது! வா.வ அதெல்லாம் இந்தப் பெண்கள் செய்கிற தொல்லை. நாய் என்ன செய்வது? மா அப்படியும் சொல்லிவிடுவதற்கில்லை. எங்கள் மாமா தெரியுமே உங்களுக்கு, சர் இராமராஜன். அவரைப் யாருமே இலண்டன் ரிடர்ன்ட், பாரிஸ்டர், மினிஸ்டர் என்று சகலரும் புகழ்ந்து பேசுகிறதுண்டு. அவர் செய்கிற காரியம், நல்ல வேளையா இந்தப் பயலுக்குத் தெரியாது போலிருக்கு. தெரிஞ்சிருந்தா, நம்ம மானத்தை வாங்கிவிட் டிருப்பான். வா.வ: என்ன செய்தார் சர். இராமராஜ்? மா: அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறீர், போங் கள்? பழனி முருகன் கோயிலுக்குப் போய் வெள்ளி தீவட்டி பிடிக்கிறார் சார், வெள்ளி தீவட்டி! இது பக்தியாம்! வா.வ: சர். இராமராஜா? மா: அவர்தான் சார்! அவ்வளவு பெரிய மேதாவி, பக்தியின் பெயரால் இந்தக் காரியம் செய்தா, இவன் கற் பூரத்தைக் கொளுத்தினதிலே தவறு என்ன, பிரமாதமா இருக்கு? வா.வ: சட்டம் இருக்கே. மா: அது இருக்கு சார்! அதைத்தான் அங்கே மேஜை மேலே மலைமலையாகக் குவித்து வைத்திருக்கிறோமே. எனக்கென்னமோ, மதத்தின் பெயராலே நாட்டிலே நடை பெறுகிற பல காரியங்களை நினைத்தால் அவன் செய்தது குற்றம்னுகூடத் தோன்றவில்லை. பாருங்கோ, நம்ம சர். இராமராஜுக்கு ஒரு சாமியார் சினேகிதம்; அவர் புராணம் படிப்பவர். யாரோ ஒரு நாயனாராம்! கடவுளுக்கென்று அவன் வைத்திருந்த புஷ்பத்தை அவனுடைய மனைவி வாசனை பார்த்தாளாம. பார்த்ததும், ஆஹா! ஆண்டவனுக்