உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாபஸ் 45 குச் சமர்ப்பிக்க வேண்டிய மலரை, நீ முகர்ந்து பார்ப்பதா என்று கோபித்துக்கொண்டு, அந்தப் பெண்ணுடைய மூக் கையே அறுத்துவிட்டானாம். வா.வ: சுத்த மடப்பயல் போலிருக்கே! மா மடத்தனம் இருக்கட்டும் சார்! எவ்வளவு போக் கிரித்தனம் பாருங்கள். நம்ம கோர்ட்டுக்கு இந்தக் கேஸ் வந்தால்... வா.வ: 326 செக்ஷன்படி தண்டனை நிச்சயம்! எங்கள் சர். மா: அப்படிப்பட்ட பித்தன் கதையை ராமராஜ் எவ்ளெவு கொண்டாடுகிறார் தெரியுமோ. இதற்கு ஆக்ஸ்போர்டு யூனிவர்சிடி படிப்பு ஏன் சார்...? வா.வ. ஆனா, அந்தக் காலத்திலே, தந்தை மகன், அண்ணன் தம்பி, குரு சீடன் முதலிய விஷயங்களிலே சிலாக் கியமான கருத்து இருந்தது. ஏகலைவன் கதையை எடுத் துக் கொள்ளுங்கோ. துரோணாச்சாரியிடம், நேரடியாக அவன் வில்வித்தை கற்றுக் கொள்ளவில்லை. உருவத்தைச் செய்துவைத்துக் குருவாகப் பாவித்துக் கற்றுக் கொண்டான். இதற்குத் துரோணாச்சாரி, குரு காணிக்கை கேட்டார், அவன் குருபக்திக்காகத் தன் கை கட்டை விரலையே அறுத் துக் கொடுத்தான். குருசீட சம்பந்தம் எவ்வளவு சிலாக்கிய மாக அமைந்திருந்தது பாரும்! மா' (சிரித்துவிட்டு) அது கிடக்கட்டும்! ஒரு விதத்திலே அதுகூடக் கொடுமைக்கு மடைமை பலியானதற்குச் சான்று தான். குருசீட சம்பந்தத்தின் அற்புதத்தை விளக்க இந்தக் கதையைக் கூறுகிறீரே, குருசீட சம்பந்தத்திலே நேரிட்ட கோணலுக்கும் கதை இருக்கிறதே. பிரகஸ்பதி குரு, சந்திரன் சீடன்! கல்வி கற்கப்போன சீடருடன் காமலீலை ஆடுகி றாள் குருபத்தினி தாரா! இந்தச் சீடனும் இசைந்து இருக்கி றான். ஆபாசமில்லையோ அது! வா.வ: அது சரி! இப்படியும் ஒன்று; அப்படியும் ஒன்று. அண்ணனுக்குச் சொந்தமான அரசை நான் ஆளமாட்டேன்;