உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செவ்வாழை, அண்ணாதுரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வழக்கு அவருடைய பாதுகைதான் ஆளவேண்டும் என்று சொன்ன பரதன், அண்ணனிடம் தம்பி காட்டவேண்டிய அன்புக்கு உதாரணமாகிறான். மா: அதைப் போலவே, இராமனை மறைந்திருந்து அம்பு போடச் செய்து, வாலியைக் கொன்று, அந்த அரசை அனுபவித்த சுக்ரீவனும் அந்தக் காலத்திலே இருந்தான். வா. வ: ஆமாம்; அதுவும் உண்மைதான். மா: ஆகையாலே அந்தக் காலம், என்னமோ மகா பிரமாதமான புண்யகாலம், அந்தக் காலத்து ஜனங்கள் மகா உத்தமர்கள் என்று பேசுவது, அந்தப் புராணங்களின் படியே பார்த்தால்கூட அவ்வளவு உண்மை என்று தெரிய வில்லை. நமக்குள்ளே பேசிக் கொள்வோம். ஏன் சார்! எப் படிப் பாண்டவர்கள் திரௌபதியைத் தங்கள் ஐவருக்கும் மனைவியாக்கிக் கொண்டு சகித்தார்கள்? அந்த தான் எப்படி இந்தக் கோர ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்டார் அம்மை கள்? சேச்சே! வெளியே சொன்னாலே வெட்கக்கேடு. அவன் சொன்னதுபோல, இனி நாட்டிலே அத்தகைய பழைய குப் பைகளைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கத்தான் வேண்டும். வா.வ: நாம் என்ன செய்ய முடியும்? மா: ஏன் சார் முடியாது? இந்த நாட்டிலே படித்தவர் கள் குறைவு. படிக்காதவர்கள் அதிகம். படிக்காத மக்கள் நம்மைப் போன்ற படித்தவர்களைப் பார்த்து நடப்பது நல்லது என்று எண்ணுகிறார்கள். படித்த நாமும் அந்தப் பழைய சேற்றிலே புரண்டால், படிக்காத கூட்டம், 'அவ் வளவு படித்தவரே புரளுகிறாரே' என்று கும்பலாகக் குட்டை யிலே விழுகின்றன. இந்த மக்களைத் திருத்த வேண்டு மானால் முதலிலே நாம் திருந்த வேண்டும் சார். வா. வ: ஆமாம்.