பக்கம்:சேக்கிழார்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் மா. இராசமாணிக்கனார் 29


அரசன். அவன் வீரத்தில் சிறந்து இருந்தாற். போலவே, சிவ பக்தியிலும், சிறந்து விளங்கினான்.

அப்பெருமகன் தஞ்சாவூரில் பெரிய கோவில் ஒன்றைக் கட்டி அழியாப் புகழ் பெற்றான். அக்கோவிலே தஞ்சைப் பெரிய கோவில் என்பது. இராஜராஜன் முன் சொன்ன திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்கள் பாடிய தேவாரப் பதிகங்களைத் தேடி எடுத்தவன்; அவற்றை நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியவரைக் கொண்டு முறைப்படுத்தியவன்; அப் பதிகங்களைப் பல கோவில்களில் பாட ஏற்பாடு செய்தவன்.

இராஜேந்திரன்

இராஜராஜன் செல்வ மைந்தன் இராஜேந்திரன். இவன் தந்தையைப் போலச் சிறந்த வீரன். இலங்கை முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தியவன்; கங்கை வரை சென்று அரசர் பலரை வென்று புகழ் பெற்றவன்; கங்கை நீரைத் தோற்ற அரசர் தலை மீது வைத்துத் தன் தலைநகருக்குக் கொண்டு வரச் செய்தவன் ; தன் கங்கா விஜயத்துக்கு அடையாளமாகப் புதிய தலைநகரம் ஒன்றைக் கட்டி, அதற்குக் கங்கைகொண்ட சோழ புரம் என்று பெயர் இட்டவன்.

இப்பேரரசன் தன் கடற்படையைச் செலுத்தி நிக்கோபர் தீவுகள், மலேயா தீபகற்பம், சுமத்ரா, ஜாவாத் தீவுகள் முதலியவற்றை வென்றவன். இவன் சிறந்த சிவ பக்தன். இவன் கங்கை கொண்ட சோழபுரத்தில் பெரிய சிவன் கோவிலைக் கட்டினவன் ; கோவில்களில் தேவாரம் ஒதுபவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேக்கிழார்.pdf/31&oldid=492390" இலிருந்து மீள்விக்கப்பட்டது