பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 155 தவர். அத்தானங்கள் திருஞான சம்பந்தர் வீதி உலா விழா விற்கு நிலம் விட்டதும், விளக்கெரிக்கப் பணம் உதவியதும் ஆகும். கறைக் கண்டன என்னும் யாப்பாவது, கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையால் நெய்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனியடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே என்பது. இத்திருப்பாட்டில் கூறப்பட்ட அடியார்கள் ஐவர். அவர்கள், கீழே குறிப்பிடப் பட்டவர்கள். கணம் புல்லர் வெள்ளாங்கரை இருக்கு வேளுரினர். பெருஞ்செல்வர். கோயிலுள் திருவிளக்கேற்றும் தொண் டினர். இவர்க்கு வறுமை வந்துற்றது. இவர் சிதம்பரம் வந் தனர். கணம் புல்லே அறுத்து விற்று அதனுல் வரும் பொருள் கொண்டு தம் தொண்டைச் செய்து வந்தனர். ஒரு நாள் கணம் புல் விலைப் படவில்லை. அதனுல் அப்புற்களையே விளக் கெரிக்கப் பயன்படுத்தினர். புற்கள் போதுமானவைகளாக இல்லை. பின்னர்த் தம் திருமுடியையே விளக்காக எரித்தனர். இறைவர் இவருக்குத் திருவருள் புரிந்தனர். காரி நாயனுர் திருக்கடவூரினர். தமிழில் கோவை பாடு பவர். மூவேந்தரிடம் சென்று பொருள் விரித்துப் பணம் பெற்றுக் கோயில் கட்டுவர்: அடியார்கட்கு அளிப்பர். நின்றசீர்நெடுமாறர் பாண்டிய மன்னர். மங்கையர்க் கரசியாரை மணந்தவர். சமணராக இருந்து திருஞான