பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 115

அம்மரபினர் வாயிலாக, (1) சுந்தரர் முனையரையரால் வளர்க்கப்பட்டமை, (2) சுந்தரர் - பரவையார் திருமணம், (3) சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடிய சந்தர்ப்பம், (4) பரவையார் ஊடலைத் திர்க்க இறைவன் தூது சென்றமை போன்ற செய்திகளை - நூல்களைக் கொண்டு அறியப்படாத இத்தகைய செய்திகளைக் கேட்டறிந்திருக்கலாம் என்று கொள்ளுதல் பெரிதும் பொருத்தமே ஆகும்.

சிற்றரசரான நரசிங்க முனையரையர் ஆதிசைவராகிய சுந்தரரை மகனாக ஏற்று வளர்த்துவந்தார் என்பதை நமக்கு முதன் முதல் அறிவிப்பவர் சேக்கிழாரே ஆவர். அவர் அதனுடன் விட்டு விடவில்லை. சுந்தரர் திருமணத்திற்கு ஒலை போக்கிய பொழுது,

"கொற்றவர் திருவிற் கேற்பக் குறித்து நாள்-

           ஓலை விட்டார்’

என்று கூறினர்; பரவையாரை மணந்து சுந்தரர். திருக்கோவிற்குச் சென்ற பொழுது அரசகுமாரனைப் போல ஊர்வலச் சிறப்புடன் சென்றார் என்றும் கூறினர். மேலும், பல இடங்களில் சுந்தரரை 'நாவலூர் மன்னன். 'நாவலூர்க் கோன்' என்றும் சுட்டியுள்ளார். இங்ஙனம் பல இடங்களிலும், சுந்தரர் அரசர் செல்வாக்குப் பெற்றவர் என்பதைச் சேக்கிழார் வற்புறுத்திச் சென்றமைக்குத் தக்க ஆதாரம் இருக்க வேண்டும் அல்லவா? சேக்கிழார், நாம் மேலே குறிப்பிட்ட முனையரையர் மரபினரிடமும் திருவாரூர்ச் சிவாசாரியர் மரபினரிடமும் கேட்டறிந்த செய்திகளின் வன்மையாற்றான் இங்ஙனம் வற்புறுத்திச் சென்றார் என்று கொள்வதே தக்கது.