பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

135

சிவபெருமானாகவே கருதி வழிபட்டவர் என்று குறித்துள்ளார். இக்கருத்து சிவஞான போதம் 12-ஆம் சூத்திரத்தும் அதன் உரையிலும் காணலாம்.

2. சேக்கிழார் அதே புராணத்தில், 'சிவனடியார் ஆதலே பெரும்பேறு என்று குறிப்பிட்டனர். இதே கருத்து அவர்க்குப் பின்வந்த சிவஞான சித்தியாரில்,

  "வாழுவெனும் மையல் வட்டு வறுமையாம் சிறுமை
                                              (தப்படுத் 
   தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம்
                             (சாரும் ஊழ்பெறல் அரிது.” 

என்று விளக்கப்பட்டிருத்தல் காணத்தக்கது. 

'சைவ சித்தாந்த் சாத்திரங்கள் பதினான்கிற்கு முன் வாழ்ந்த சேக்கிழார் எந்தச் சித்தாந்த நூல்களைப் பயின்றவர்' என்ற கேள்வி எழும் அன்றோ! இக்கேள்விக்கு விடை. பதினொரு திருமுறைகளும் இராச சிங்கன் கல்வெட்டிற் காணப்பட்ட சைவ சித்தாந்த நூல்களுமே யாம்.'சைவ சித்தாந்தத்தில் வல்லவன்' என்று இராசசிங்கன் கூறப்பட்டான் எனின், அவன் காலத்தில், (கி.பி. 690-720) சைவ சித்தாந்த நூல்கள் இத் தமிழ் நாட்டில் இருந்தன என்பது வெள்ளிடை மலையன்றோ? அந் நூல்களிலும் சைவத் திருமுறைகளிலும பொதிந்துள்ள சைவசித்தாந்தக் கருத்துகளையே சேக்கிழார் தமது பெரிய புராணத்துட் பல இடங்களிற் குறித்துள்ளனர்.

இசைக்கலை. சங்க காலத்திலிருந்தே இசை நடனம் போன்ற நாகரிகக் கலைகள் தமிழர் வாழ்வில் வீறு கொண்டிருந்தன. அவை இடைக்காலத்தில்சமய வளர்ச்சிக்காகப் பெருந்தொண்டாற்றும் கருவிகளாகக் கொள்ளப்பட்டன. திருமுறைகள் சமயாசிரயர் கால முதல்