பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 -

சேக்கிழார்



பண்ணோடு பயிலப்பட்டன. அதனால், தமிழிசை பற்றிய நூல்கள் பல இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. அவ்வாறு இசைப்பற்றய நூல்கள் மிக்கிருந்தமையாற்றான், அடியார்க்கு நல்லார், அரங்கேற்று காதைக்குச் சிறந்த உரைகாண முடிந்தது. அவ்விசை நூல்களைச் சேக்கிழார் அழுத்தமாகப் படித்தவர் என்பது, இசைபற்றிய அவருடைய பாடல்களிலிருந்து நன்குணரலாம். சான்றாகச் சில இடங்களை காண்க:

1. “இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பட்ட சுந்தரர் திருவெண்ணெய் நல்லூர்க் கோவிலில் பாடிய 'பித்தா, பிறை சூடி என்று தொடங்கும் முதற் பதிகம் இந்தளம் என்ற பண்ணிற் பாடப்பட்டது. அதனைச் சுந்தரர் இன்ன முறையிற் பாடினார்' என்று சேக்கிழார் விளக்கிக் கூறலைக் காண, அவரது இசைப் புலமை இற்றென இனிது விளங்கும்.

          "முறையால்வரு மதுரத்துடன் மொழி:இத்தள முதலில் 
           குறையாநிலை மும்மைப்படி கடுங்கிமு மையினால் 
           நிறை பாணிகசின் இசைகோள் புணர் வகையால் 
           இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் இல்லான்.
                                          - தடுத்தாட்கொண்ட புராணம் 75.

2. ஆனாயர் புராணத்தில், (1) புல்லாங்குழலுக் குரிய மூங்கிலைத் தேர்ந்தெடுத்துச் செய்யும் முறை, (2) அக்குழலை வைத்து ஆனாயர் பாடிய முறை, (3) அக்குழல் இசையால் உயிர்கள் உற்ற இன்பம் முதலியவற்றை மிகவும் தெளிவாகக் கூறியுள்ள முறையை நோக்க, சேக்கிழார் இசைத் துறையிற் பண்பட்ட புலமை உடையவர் என்பதைத் தெளிவாக உணரலாம்.

ஆனாயர் புராணம், செ.13,22.28. 29-36,