பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

Ll 137


நடனக்கலை. அப்பர் திருப்புகலூரில் தம் இறுதி நாட்களைக் கழித்துக்கொண்டு இருந்தபொழுது அவரது உள்ளத்தைப் பரிசோதிக்கச் சிவபெருமான் ஏவற்படி தேவலோக நடனமங்கையர் வந்து அப்பர்முன் தோன்றினர்: ஆடல்பாடல்களை நிகழ்த்தினர் என்ற இடத்தில், சேக்கிழார், ஆடல் பாடல் பற்றிய நுட்பங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார்.

         1. "வானகமின் னுக்கொடிகள் வந்திழித்தால் எனவந்து
             தானநிறை ஈருதிகளில் தருமலங்கா ரத்தன்மை 
             கான்அமு தம்பரக்கும் கனிவாயில் ஒளிபரப்பப் 
             பானல்நெடுங் கண்கள்வெளி பரப்ப இசைபாடுவார்.”  
          2."கற்பகப்பூந்த தனிரடி போங்கி கர்மருசா ரிகைசெய்ய
             உற்பல்மென் முகிழ்விரல்வட்டணையோடுங்கை பெயரப்    
             பொற்புறுமக் கையின்வழிப் பொருகயற்கண் புடைபெயர 
             அற்புதப்பொற் கொடிநுடங்கி ஆடுவபோல் ஆடுவார்." 
                                       - அப்பர் புராணம், செ. 419-420, 

வானநூற் புலமை. பெரிய புராணத்துட் கூறப்படும் கார்காலம், பனிக்காலம், இளவேனில் முதலியவற்றைப் பற்றிச் சேக்கிழார் கூறும் இடங்களில் எல்லாம் அவரது வான நூற் புலமையையும் அவ்வப் பருவகால மாற்றங்களை அளந்துகூறும் அறிவு நுட்பத்தையும் நன்குணரலாம். 'குரியன் துணைப்புணர் ஒரையைச் சேர்ந்தான் அதனால் வெங்கதிர் பரப்பினான் பரப்பவே இளவேனில் முதுவேனிலாயிற்று' என்று சேக்கிழார் கூறல் நுட்பம் வாய்ந்ததாகும்.'துணைப்புணர்ஒரை' என்பது மிதுனமாகும் மிதுனம் இரட்டை ஆதலின் துணைப்புணர் இரை என்றார். இதுவன்றோ வானநூற் புலமை நுட்பம்!

           'மகிழ்ந்த தன்தலை வாழுமத் தாளிடை வானில் 
            திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர் ஓரையுட் சேர்ந்து