பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

139




(1) சூலைநோய்,(2) கண்ணோய், (3) பாம்புக்கடி, (4) முயலகன் என்ற நோய், (5) பணி நோய், (6) வெப்பு நோய் முதலியவற்றைப் பற்றி அவர்கூறியுள்ள விவரங்கள் படித்து ஆராயத் தக்கவை. இங்குச் சான்றாக இரண்டு காண்போம்.

1. வெப்பு நோய். இது சம்பந்தரால் ஏவப்பட்டுப் பாண்டியன் நெடுமாறனைப்பற்றிய கொடிய இவர நோய் ஆகும். இது வடமொழியில் ஆகந்துக இவரம் எனப்படும்: ஆகந்துகம் என்பது அடி முதலியன தாக்குவதாலும் சாபம் முதலியவற்றாலும் பூர்வரூபம் இல்லாமல் திடீரென்று உண்டாகும் ஜ்வரம், இது நான்கு வகைப்படும். அவை (1) அபிகாத ஜ்வரம், (2) அபிஷங்க ஜ்வரம், (3) சாப ஜ்வரம், (4) அபிசார ஜ்வரம் என்பன. இவற்றுள் சாப ஜ்வரம் ரிஷிகள், ஆசாரியர், தேவதைகள் முதலியவர்கள் இடும் சாபத்தினால் திடீரென உண்டாவது. இது பொறுக்க முடியாத கொடிய ஜ்வரம். இது வாய் பிதற்றலும் நடுக்கமும் உண்டாக்கும்.

'நெடுமாறனுக்கு உண்டான வெப்பு நோய் சாப இவரம் ஆகும். அஃது அரசனுக்கு உடல் நடுக்கத்தையும் கொடிய உஷ்ணத்தையும் உண்டுபண்ணியது. அது மருத்துவப் புலவரால் ஒழிக்கப்படவில்லை. அரசன் வாய்பிதற்றலானான்’ என்ற விவரங்கள் சேக்கிழார் கூறக் காணலாம். இக் கூற்று மேற்சொன்ன மருத்துவர் கூற்றுடன் ஒன்றுபடல் காண்க. .

2. சூலை நோய். இஃது ஒருவகைக் கொடிய வயிற்றுவலி, வாதம்-பித்தம்-கபம் என்னும் மூன்றன் நிலை மாறுதல்களால் நிகழ்வது. இது பல துன்பங்களைத் தருவது சிகிச்சைக்கு வசப்படாதது. வயிற்றுக் குடைச்சல், வயிற்று இறைச்சல், நாவறட்சி மூர்ச்சை,பொருமல், வயிறு மந்தமாக இருத்தல், வாய் சுவை உணர்வு-அற்று-இருத்தல், கபம் .

இதன் விவரங்கள் 'சார்ங்கதர சம்ஹிதை அஷ்டாங்க ஹிருதயம், மாதவ நிதானம் என்ற மருத்துவ நூல்களிற் காணலாம்.