பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

141


       (3)'உச்சமுற வேதனைநோய் ஓங்கியெழ. 
       (4) கொல்லாது தலைநோய் குடர்முடக்கித் திராமை" 
           எல்லாரும் கைவிட்டார்.”
                                  - அப்பர் புராணம் செ. 49-51, 57


 நீதிநூற் புலமை. நீதிநூற் புலமையிலும் சேக்கிழார் சிறந்திருந்தார் என்பதைத் தடுத்தாட்கொண்ட புராணத்தாலும் கண்ணப்பர் புராணத்தாலும் சண்டீசர் புராணத்தாலும் நன்கறியலாம். சான்றாக ஒன்று காணபோம். 
 சிவபெருமான், சுந்தரர் திருமணத்தைத் தடுக்க மறையவராக வந்தார். சுந்தரர்க்குப் பாட்டனார் தமக்கு வழிவழி அடிமை செய்வதாகப் பத்திரம் ஒன்று எழுதித் தந்தார் என்றும், அதன்படி சுந்தரர் தமக்கு அடிமை என்றும் வாதித்தார். அவர் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதன் மூல ஓலை (Original) திருவெண்ணெய் நல்லூர்ச் சபையாரிடம் அரண் தரு காப்பில் (Safe custody) இருந்தது. ஒலையைக் கிராம நீதிபதிகளாகிய ஊரவையார்முன் வாசிக்க காணத்தான் (Clerk of the village court) இருந்தான். வழக்கு விசாரணையில் ஆட்சி (Oral Evidence), ஆவணம் (Documentary Evidence) அயலார் காட்சி (Circumstantial Evidence) என்பன கவனிக்கப்பட்டன. சேக்கிழார் இவை அனை்தையும் மிகவும் விளக்கமாகக் கூறியுள்ளமை நோக்க, அவரது நீதிநூற் புலமை எண்ணி எண்ணிக் களிக்கத் தக்கதாகும். - - -

சேக்கிழார் செய்யுட் சிறப்பு

 1. சேக்கிழார் செய்யுட்கள் பிற புலவர் பாக்களைப் போலக் கரடு முரடானவை அல்ல. அவை எளிய நடையில் அமைந்தவை. செம்பகாமானவை. சான்றாகக் கடவுள்

தடுத்தாட்கொண்ட புராணம், செ. 41-62