பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் 0

143


தொடர்பான பண்டை நிகழ்ச்சிகளை மறவாது கூறும் இயல்பு சேக்கிழாரிடம் உண்டு. இதனைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள் பரக்கக் காணலாம்.

5. சேக்கிழார். தன்மை நவிற்சி ஒன்றையே பெரும்பாலும் கையாண்ட சங்ககாலப் புலவரைப் போன்றவர் ஆவர். ஆதனுர்ச்சேரி வருணனை, நாகைநுளைப்பாடி வருண்னை, உடுப்பூர்-வேடர்சேரி வருணனை என்பவற்றைப் படிப்பார்க்கு இவ்வுண்மை விளங்கும்.
6. இடத்திற்கு ஏற்பச் சந்தங்கள் அமைத்து பாடுதல் என்பது பெரும் புலவர் வழக்கம். அதனை சேக்கிழாரிடம் சிறப்புறக் காணலாம். கண்ணப்பர் வேட்டைக்குப் புறப்படல், வேட்டையாடல், புகழ் சோழர் படைகள் போரிடல் போன்ற இடங்களில் எல்லாம் அதனதனுக்குரிய சந்தம் அமைத்திருத்தலை காண்க . . . -
7. சேக்கிழார் கடுஞ்சொற்களைக் கூற அஞ்சியவர் என்பதுபெரியபுராணத்தை ஊன்றிப் படித்து உணர்ந்த ஒன்றாகும். பகைவன் சிவனடியாரைக் குத்த திரும்பி, அடியார் வேடத்தில் வந்து, அமயம் பார்த்துக் குத்தியதைக் - கூறவந்த சேக்கிழார்,
                 "பகைவன் நினைந்த அப் பரிசே செய்தான்." 
           என்று நயம்படக் கூறல் காணலாம். இங்ங்னமே பிறிதோர் இடத்திலும்,
                  "பகைவன். தன்கருத்தே முற்றுவித்தான். 
          என்று. தீயதை மறைத்துக் கூறியிருத்தல் காண்க.
சேக்கிழார் செய்யுட்களின் சிறப்பியல்புகள் மேலும் பலவாகும். நீவிர் அவற்றை மூல நூல் கொண்டு படித்துச் சுவைத்தல் வேண்டும். சேக்கிழார் பெருமான் ஒப்பற்ற உயரிய புலவர் எல்லாக் கலைகளிலும் வல்லவர் பிற புலவர் நூல்களிற் பேரளவிற் காணப்பெறாத திணை. மயக்கம் முதலியன விளங்கக்கூறி நம்மை வியப்புறுமாறு