பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 சேக்கிழார்

திருமறைக்காடு, காஞ்சிபுரம், திருப்பழுவூர், திருநெல் வெண்ணெய், பெண்ணாகடம், சீகாழி, திருக்கோவலூர், திருமாணிக்குழி, திருவையாறு, திருவொற்றியூர், அச்சிறுபாக்கம், திருவைகாவூர், திருக்காளத்தி, திருக் கழுக்குன்றம், திருத்தூர், திருநாவலூர், திருப் புறம்பயம், திருவாரூர், திருவதிகை, திருவெண்ணெய்நல்லூர், திருப்புகலூர், திருவிடைமருதூர், திருவல்லம், திருஆவடுதுறை, திருமுதுகுன்றம் என்ற பாடல்பெற்ற கோவில்கள் சிறப்புற்றன என்பதைக் கல்வெட்டுகளால் அறிகிறோம்.

திருவாரூர்க் கல்வெட்டுகள். 1 “அநபாயன் தில்லைப் பொன்னம்பலத்துள் ஆடல் கொண்டுள்ள பெருமானது பாத செந்தாமரையில் உள்ள தேனைப் பருகும் வண்டு போன்றவன். அவன் அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்பவர் திருமேனிகட்குப் பல ஆடை அணிகளும் பூசைக்குரிய பொருள் வசதியும் அளித்தான்” என்று திருவாரூர்க் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. இதனால் அவனது பக்திப் பெருமதிப்பும் தேவார ஆசிரியரிடம் அவன் வைத்திருந்த பெருமதிப்பும் நன்கு விளங்கலாம்.

2. “சுந்தரர் தாயாரான இசைஞானியார், திருவாரூர்ஞான சிவாசாரியார் மகளார் ஆவர். அநபாயன்சடையனார், இசைஞானியார், சுந்தரர் இவர்தம் திருவுருவச் சிலைகளைப் பூங்கோவிலில் எழுந்தருளச் செய்தான்” என்று மற்றொரு கல்வெட்டு கூறுகிறது.

இங்ஙனம் பரம சிவபக்தனாக விளங்கியவன் அநபாய சோழன். அவன் வழிவழியாகவே சைவராக இருந்து வந்த சோழர் மரபில் பிறந்த வழுவிலா மன்னவன். அவனது நற்காலமோ அன்றித் தமிழ்நாடு செய்த நற்றவமோ, அறியோம் வழிவழிச் சைவராக வந்த சேக்கிழார் மரபில்