பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

சேக்கிழார்

கோவில் வகைகள்: தமிழ் நாட்டுக் கோவில்கள் (1) பெருங் கோவில், (2) இளங்கோவில், (3) மணிக் கோவில், (4) கரக் கோவில், (5) தூங்கானை மாடம், (6) மாடக் கோவில் எனப் பலவகைப்படும். இவற்றுள் பெருங்கோவில் என்பது தில்லை, மதுரை. திருவாரூர் போன்ற சிறந்த இடங்களிற் கட்டப்பட்ட பெரிய கோபுரங்கொண்ட கோவில்கள் ஆகும். இளங்கோவில் என்பது பெரிய கோவிலைப் பழுது பார்க்குங்கால் மூர்த்தங்களை எழுந்தருளச் செய்து வழிபாடு நடைபெற்று வந்த சிறு கோவில் ஆகும். அது பெருங்கோவில் பிராகாரத்திற்கு உள்ளேயே இருக்கும். ஒரே ஊரில் இரண்டு கோவில்கள் இருந்தால், அளவுநோக்கி, ஒன்று பெருங்கோவில் என்றும் மற்றது இளங்கோவில் என்றும் கூறப்படலும் உண்டு. மாடக் கோவில் என்பது கட்டு மலையையும் யானை செல்லக்கூடாத திருமுன்பையும் உடையது. நன்னிலம், சாய்க்காடு முதலிய இடங்களில் உள்ள கோவில்கள் மாடக் கோவில்கள் ஆகும். மூலத்தானத்திற்கு மேலே உள்ள விமானம் (படுத்து) தூங்குகின்ற யான்ை வடிவில் அமையப்பெற்ற கோவில் துங்கானை'மாடம் எனப்பட்டது. பெண்ணாகடம், திருத்தணிகை முதலிய இடங்களில் இத்தகைய கோவில்களைக் காணலாம். திருவதிகைக் கோவில், திருக்கடம்பூர்க் கோவில்களின் உள்ளறைகள் தேர் போன்ற அமைப்புடையவை உருளைகளையும் குதிரைகளையும் கொண்டவை. இங்ங்னம் பலவாறு - அமைந்த இக்கோவில்கள் இன்று-நேற்று உண்டானவை அல்ல. அவை அப்பர் காலத்திற்கும் முற்பட்டவை.

பலவகை அடியார் சிவத் தலங்களில் பலவகை அடியார்கள் இருந்தனர். திருவாரூரில் விரிசடை அந்தணர், மாவிரதியர், காபாலிகர் பாசுபதர் முதலி யோர்