பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

37

சிவத்தலயாத்திரை செய்தவர் சிவன்கோவில் கட்குப் பல திருப்பணிகள் செய்தவர். ஆதலால், அவர் காலத்தில் (கி.பி. 6-ஆம் நூற்றாண்டில்) சிவத்தலங்கள் சிறப்புற்று இருந்தன. என்பதை நன்கு அறியலாம்.

அப்பர்-சம்பந்தர் காலம்

(கி.பி 600-661)

மகேந்திர வர்மன். இவன் அப்பர் காலத்தவன் சமண சமயத்திலிருந்து சைவராக மாறின. அப்பரைச் சமண, முனிவர் யோசனைப்படி நீற்றறையில் இட்டவன். விடங்கலந்த உணவை உண்ணச் செய்தவன் யானையைக் கொண்டு அப்பரைக் கொல்ல முயன்றவன் இறுதியில் அவரைக் கல்லிற்கட்டிக் கடலிற் பாய்ச்சினவன் இத்துன்பங்களிலிருந்து அப்பர் தப்பியதும் தானும் சமணப்பற்றை விட்டுச் சைவத்தைத் தழுவினவன். இவன் இங்ங்னம் சைவனாக மாறியவுடன் திருச்சிராப்பள்ளி மலைமீது ஒரு கோவிலைக் குடைவித்து சிவலிங்கத்தை எழுதருளச் செய்தான் வேற்றுத்துறையில் இருந்த எனது அறிவை நன்னிலைக்குத் திருப்பிய இந்த லிங்கத்தின் புகழ் உலகெலாம் பரவட்டும் என்ற தன் கருத்தைக் கல்வெட்டுமூலம் வெளிப்படுத்தியுள்ளான். இவனுடைய விருதுப் பெயர்கள் பலவற்றுள் குண்பரன் என்பது ஒன்று. இவன் பாடலிபுரத்திலிருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து, அச்சிதைவுகளைக் கொண்டு 'குண்பர ஈச்சரம்' என்ற சிவன் கோவிலைத் திருவதிகையிற் கட்டினான். இவன் சிவபெருமானுக்காகச் சியமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் கோவில்களைக் குடைந்தமைத்தான் காஞ்சிஏகாம் பரநாதர் கோவிலில் மண்டபம் ஒன்றைக் கட்டுவித்தான். இவனே தமிழகத்தில்