பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

சேக்கிழார்

முதன் முதல் கற்கோவில் கண்ட காவலன் ஆவன். இவன் காலத்தில் இருந்த தமிழகத்துக் கோவில்கள் அனைத்தும் செங்கல், மண் மரம், உலோகம் சுண்ணாம்பு முதலியன கொண்டு கட்டப்பட்டவை. அதனாற்றான் அப்பழங்காலத்துக் கோவில்கள் நாளடைவில் அழிந்துபட்டன. மகேந்திர வர்மன் இசையிலும் நடனத்திலும் நாடகத்திலும் சிறந்த புலவனாக இருந்தான். இவன் காலத்தில் தமிழ்நாட்டுச் சைவ சமயம் சிறந்த நிலையில் இருந்தது என்பது அப்பர். சம்பந்தர் பாடல்களால் அறியலாம்.

அப்பர் - சம்பந்தர் திருமுறைகள் அறிவிப்பன. மகேந்திரவர்மன் காலத்தும் அவன் நரசிம்மவர்மன். காலத்தும் வாழ்ந்த அப்பர், சம்பந்தர் பாடிய திருமுறைகள் ஆராயத்தக்கன. அவற்றுள் அப்பர் பாடிய தலங்கள் 126 சம்பந்தர் பாடியன ஏறத்தாழ 220 வைப்புத் தலங்கள் உட்படப் பாடல் பெற்ற தலங்கள் 300 என்னலாம். இக்கோவில்கள் எல்லாம் அழிந்துவிடத் தக்க மண், மரம், செங்கல், உலோகம், சுண்ணாம்பு இவற்றால் கட்டப்பட்டவையே ஆகும். இவை இமயம் முதல் கன்னியாகுமரி முனைவரை பரந்திருந்தன. இக் கோவில்கள் பலவற்றில் இச்ை. நடனம் வளர்க்கப்பட்டன் பல கோவில்கள் பெரியன. கோபுரங்கொண்டன. பலவற்றில் விழாக்கள் சிறப்புற நடந்தன. பல தலங்களில் அப்பர் - சம்பந்தர்க்கு முற்பட்ட நாயன்மார் வரலாறுகள் வழக்கில் இருந்தன. பலலவ அரசர்கள் புதியனவாகக் கட்டிய கோவில்களும் பாடப்பெற்றன. அவை பல்லவன் ஈச்வரம், மகேந்திரப்பள்ளி என்பன். பலவகையான சைவ அடியார்கள் தலங்கள் தோறும் இருந்தனர் யாத்திரை செய்தனர். தில்லை. திருவாரூர், காளத்தி, ஆலவாய் முதலியன சிறந்த சிவத்தலங்களாக விளங்கின. பழைய