பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் o

Ꮾ1


நிலையில் இருக்கிறார். அவரைச் சூழ அடியவரும் கணங்களும் காண்கின்றனர்.

2. சிவபிரான் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட வரலாற்றை விளக்கும் சித்திரம் அழகானது. மணத்திற்கு வந்த மறையவர் ஒரு மண்டபத்தில் கூடியுள்ளனர். அவர் கட்கு இடையில் இருவர் எதிர் எதிராக நிற்கின்றனர். ஒருவர் கிழவர் மற்றொருவர் குமரர். கிழவருடைய் ஒரு கையில் தாளங்குடை இருக்கிறது; மற்றொரு கையில் பனையோலை காணப்படுகிறது. இளைஞர் அடக்கமாக நிற்கின்றார். கூட்டத்தினர் முகத்தில் திகைப்பும் வியப்பும் மாறி மாறிக் காண்கின்றன. அவர்கட்கு வலப்புறம் ஒரு கோவில் காண்கிறது. கூட்டத்தினர் அதற்குள் விரைவாக நுழைகின்றனர்.

3. அடுத்த ஒவியம் சுந்தரரும் சேரமானும் கயிலை செல்வதைக் காட்டுவதாகும். வெள்ளையானை நான்கு கோடுகளுடன் தெரிகிறது. அதன் கோடுகளிர் பூண்கள் இடப்பட்டுள்ளன. அந்த யானைமீது இளைஞர் ஒருவர் இவர்ந்து செல்கிறார். அந்த இளைஞர் தாடியுடையவராகக் காண்கிறார். அவர் கைகளில் தாளம் இருக்கிறது. அது விரைந்து செல்வதாகத் தெரிகிறது. அதன்மீது கட்டமைந்த உடல்வளம் கொண்ட ஒருவர் அமர்ந்து அதனைச் செலுத்துகிறார். யானையும் குதிரையும் ஒரே திசை நோக்கிச் செல்கின்றன. யானைமீது செல்பவர் சுந்தரர் குதிரை மீது செல்பவர் சேரமான் பெருமாள் நாயனார்.

4. இவ்விரண்டு பக்த சிரோமணிகட்கு மேற்புறமாகக் கந்தர்வர் பலர் காண்கின்றனர். அவர்களுள் சிலர் சுந்தரர் மீதும் சேரமான்மீதும் மலர்மாரி பெய்கின்றனர். வேறு சிலர் பலவகை இசைக் கருவிகளை இசைக்கின்றனர்.