பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 U. G ॐ ॐ ॰ं {ं च हं

சேக்கிழார், "அறுபத்துமூன்று நாயன்மார் வரலாறுகளை உள்ளடக்கிச் சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடியருளினார்: இராசராசன் காலத்து - நம்பியாண்டார் நம்பி அதனை ஓரளவு வகைப்படுத்தி, நாயனார் வரலாறு ஒன்றுக்குச் செய்யுள் ஒன்று வீதம் 'திருத்தொண்டர் திரு அந்தாதி என்று ஒரு நூல் பாடியுள்ளார். அந்நாயன்மார் வரலாறுகள் இம்மைக்கும் மறுமைக்கும் பற்றாவன. அவற்றைக் கேட்பதும். அந்நாயன்மார் வரலாறுகளிற் பொதிந்துள்ள உயரிய கருத்துகளை உணர்ந்து நடப்பதும் நன்மை பயக்கும்.” என்றார். - -

அரசன். 'அஃதாயின், அந்நாயன்மார் வரலாறுகளை நீரே கூறி அருளுக.” என்று வேண்டினான்.சேக்கிழார், தொகை-வகை-திருமுறைகள் இவற்றைத் துணையாகக் கொண்டு, நாயன்மார் வரலாறுகளை விரித்து உரைத்தார். சோழர் பெருமான் கேட்டு வியந்தான் "அமைச்சர் ஏறே, இவ்வியத்தகு அடியார்கள் வரலாறுகளைப் பெரியதோர் புராணமாகப் பாடி முடிக்க நீரே வல்லவர். ஆதலின், அதனைப் பாடியருள்க, என்று கூறி, அவரைத் தில்லைக்கு அனுப்பினான். அவருக்கு வேண்டும் பொருள் வசதி, ஆள்வசதிகளை அளித்தான். -

சேக்கிழார் சிதம்பரம் சென்று கூத்தப் பெருமானைப் பணிந்து, "ஐயனே. பெருமை மிக்க நின் அடியார் வரலாறுகளை மிகச் சிறியேனாகிய யான் எங்ஙனம் கூறவல்லேன் நான் பாட இருக்கும் பெரு நூலுக்கு முதல் தந்து ஆசீர்வதித்து அருளுக” என்று சிற்றம்பலத்தின் முன் திரிகரண சுத்தியாக நின்று வேண்டினார். அப்பொழுது "உலகெலாம்” என்ற தொடர் சேக்கிழார் காதிற்பட்டது.