பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார் ப. 73

அவர் அதனைக் கூத்தப்பிரானது அருள் மொழியாகக்

கொண்டு, புராணம் பாடத் தொடங்கி ஒராண்டில் பாடி


முடித்தார். - -

இவ்வரலாறு பற்றிய ஆராய்ச்சி

சிந்தாமணி. அநபாய சோழன் சீவக சிந்தாமணி என்ற சமண எகாவியத்தைப் படிக்கக் கேட்டுப் பரவச மடைந்தான் என்பது இப்புராணம் மட்டுமே கூறும் செய்தி. இதனை உறுதிப்படுத்த வேறு சான்று இல்லை. அரசன் மெய்யாகவே அந்நூலைப் படிக்கக் கேட்டான் எனினும், அதனால் இழுக்கொன்றும் இல்லை. சிந்தாமணி படிப்பதாலோ - பிறர் படிக்கத் தான் கேட்பதாலோ அரசன் கெட்டுவிடவோ, சமயம் மாறவோ வழியில்லை. மிகச் சிறந்த தலையாய புலவர் பெருமான் என்று மதிக்கத்தக்க சேக்கிழாரே சிந்தாமணியைச் செவ்வை யாகப் படித்தவர் என்பது அவரது பெரிய புராணத்தால் தெளிவாகத் தெரிகிறது. உயர்தரப் புலவர் பெருமக்கள், புலமைபெற எல்லாச் சமயத்தவர் நூல்களையும் படித்தே தீருவர். அவர்கட்குப் புலமை பெரிதே தவிரக் கேவலம் சமய வேறுபாடு பெரிதன்று. அந்த முறையில் சேக்கிழார் சித்தாமணியை நன்றாகப் படித்தவராவர். சிந்தாமணி சோழர் காலத்து முதற் காவிய நூல் ஆகும். பெரிய புராணம் இரண்டாம் காவிய நூலாகும். கம்பராமாயணம் அடுத்துச் செய்யப்பட்ட நூலாகும். சேக்கிழார் சிந்தாமணியை நன்றாய்ப் படித்தார்போலவே, பின்வந்த கம்பர் பெருமான் சிந்தாமணியையும் பெரிய புராணத்தையும் அழுத்தமாகப் படித்தவர் என்பது அவரது இராமாயணம் கொண்டு கூறலாம். -