பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 சேக்கிழார்

இங்ஙனம் சிந்தாமணியைச் செவ்வையாகப் படித்த பழுதற்ற, புலவராகிய சேக்கிழார், அரசனைமட்டும் படிக்கலாகாது என்றோ, படிக்கக் கேட்கலாகாது என்றோ தடுத்தார் என்பது நம்பத்தக்கதன்று. அவர் தடுத்தார்: அந்நூலை இழித்துரைத்தார் என்பது அவரது பெரும் புலமைக்கும் தலைமை அமைச்சர் பதவிக்கும் ஏற்றதாகாது. சிறந்த பெளத்த - சைவ, சமண - சைவ வாதங்களைப் பழுதற்ற சாத்திரீய முறையில் விளக்கமாகப் பாடியுள்ள சேக்கிழார், பெளத்த, சமணச் சார்பான சமய நூல்களை நன்கு கற்ற நவையறு புலவராவர். அப்பெரியார் மீது இத்தகைய சமய வெறுப்புக் குற்றத்தை ஏற்றிக் கூறல் பெருந்தவறு. அக்குற்றம் சேக்கிழார் புராணம் பாடிய

ஆசிரியரையே சாரும்.

அநபாயன் கேள்விகள்.'சிவகதை கேட்டல் நல்லது என்று சேக்கிழார் கூறக்கேட்ட சோழ மன்னன், நாயன்மார் பெயர்களைக்கூட அறியாத பாமரனாக இருந்து, 'நவகதையோ? புராணமோ? முன்னூல் உண்டோ? நானிலத்திற் சொன்னவர் யார்? கேட்டவர் யார்?' எனப் பலவாறு வெளிநாட்டான் ஒருவன் கேட்டாற்போலக் கூறப்படும் வினாக்கள் சோழர் வரலாற்றை அறிந்த அறிஞர் நகைக்கத் தக்கனவாகும். "மெய்யாகவே இக்கேள்விகளை அநபாயன் கேட்டிருத்தல் இயலுமா என்பது இங்கு ஆராயத் தக்கது.

சோழர் சைவ சமயத் தொண்டு. சோழர் சைவ சமயத்தைத் தம் உயிர்போலக் கருதிப் பாதுகாத்து வளர்த்து வந்தவர் என்பது வரலாறு கூறும் உண்மை. சோழப் பேரரசை ஏற்படுத்திய ஆதித்த சோழன் காவிரியின் பிறிப்பிடத்திலிருந்து கடல்புகும் வரை அதன் இருகரைகளிலும் சிவன்கோவில்களைப் புதியனவாகக் கட்டியும், பழையவற்றைப் புதுக்கியும் அழியாப் புகழ்