பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

76 சேக்கிழார்


செம்பியன் மாதேவியார் கட்டிய புதிய சிவன்கோவில்கள் பல புதுப்பித்த பாடல்பெற்ற கோவில்கள் பல பொன் வெள்ளிப் பாத்திரங்கள் அளிக்கப்பெற்ற கோவில்கள் பல. இராசராசன் தமக்கையாரான குந்தவையார் செய்த அறப்பணிகள் பலவாகும். இராசராசன் மனைவியாரான உலகமகாதேவியார் திருவையாற்றில் கோவில் கட்டிப்புகழ் பெற்றவர். இராசராசன் மகளிர் செய்த திருப்பணிகள் பல. இங்ங்னமே ஒவ்வொரு சோழ அரசன் மனைவியரும் மகளிரும் செய்துள்ள சைவத் திருப்பணிகள் பலவாகும்.

அநபாயன் காலம்: இங்ஙனம் கனவிலும் சிவன் தொண்டை மறவாத சோழர் மரபில் வந்தவன் அநபாயன் கூத்தப்பிரானை நம் குலநாயகம் என்று அழைத்து. அளப்பரிய திருப்பணிகளை அப்பெருமான் கோவிலுக்குச் செய்ய முனைந்த விக்கிரம சோழன் திருமகன் அநபாயன். அவன், தன் தந்தை அரைகுறையாக விட்டுச் சென்ற திருப்பணிகளை முற்றச் செய்து அழியாப் புகழ்பெற்றவன். அவனது சைவப் பற்றைக் குலோத்துங்கன் உலா. இராசராசன் உலா, குலோத்துங்கன் கோவை இவற்றாலும் - எண்ணிறந்த கல்வெட்டுகளாலும் அறியலாம். இராசராசன் காலமுதல் நாயன்மார் உருவச் சிலைகள் ஆங்காங்குப் பேரளவில் எடுப்பித்துப் பூசைகளும் விழாக்களும் நடைபெற்று வந்துள்ளன. அநபாயன் புதுப்பித்த சிதம்பரம் கோவிலிலேயே நரலோகன் விருப்பப்படி திருமுறைகளை ஒத மண்டபம் சமைக்கப்பட்டது. அங்குத் திருமுறைகள் ஒதப்பட்டு வந்தன. அநபாயன் இருந்த சோழர் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்துப் பெருங் கோவிலிலேயே சண்டீசர் வரலாறு உணர்த்தும் சிற்பங்கள் இருந்தன. தஞ்சைப் பெரிய கோவிலில் நாயன்மார் உருவச் சிலைகளும் முன் சொன்ன ஒவியங்களும் அழகொழுகக் காட்சி