பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78 சேக்கிழார் .

உமாபதிசிவம் சேக்கிழார் புராண ஆசிரியரா? சேக்கிழார் புராணத்தில் நாயன்மார் அறுபத்துமூவரைப் பற்றிய குறிப்புகள் காண்கின்றன. 'திருத்தொண்டர் புராணசாரம் என்ற நூலிலும் அந் நாயன்மார் வரலாறுகள் சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளன. (1) முதல் நூலில் பல்லவப் பேரரசரான கழற்சிங்கர், ஐயடிகள் காடவர்கோன் இவர்கள் சிற்றரசர் என்று கூறப்பட்டுள்ளனர். ஆயின் பின் நூலில் இவ்விருவரும் பல்லவப் பேரரசர் என்பது தெளிவாகக் காண்கிறது. (2) பேரரசர் அறுவர் என்று கூறிச் சிற்றரசரான இடங்கழி நாயனாரும் அந்த அறுவரில் ஒருவராகக் குறிக்கப்பட்டனர். (3) இசையில் வல்லவராக நந்தனார் முதலியோரைக் கூறிய ஆசிரியர் சுந்தரரைக் கூறாது விட்டார். இங்ஙனம் சிறந்த பிழைகள் பல சேக்கிழார் புராணத்துட் காண்கின்றன. மேற்சொன்ன இரண்டு நூல்களையும் செய்தவர் ஒருவராயின், இத்தகைய தவறுகள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ள கூற்றுகள் நூலில் இடம் பெற முடியுமா? முடியாது. ஆதலின், முன்னூலைப் பாடியவர் வேறு: பின்னூலைப் பாடியவர் வேறு எனக் கொள்ளலே பொருத்தமாகும்.

திருமுறை கண்ட புராணம். நம்பி, இராசராசனைக் கொண்டு திருமுறைகள் தொகுத்த வரலாற்றைக் கூறுவது இப்புராணம். நம்பி, முதல் ஏழு திருமுறைகளைத் தொகுத்தார் என்று கூறி, அவர் மேலுந் திரு வாசகத்தையும் திருக்கோவையாரையும் எட்டாந் திருமுறையாகவும், நம்பிக்கே காலத்தாற் பிற்பட்டவராகக் கருதத்தக்க அடியார் பலர் பாடல்களை ஒன்பதாந் திருமுறையாகவும், அப்பர்சம்பந்தர்க்கே காலத்தால் முற்பட்டவரான திருமூலர் பாடிய திருமந்திரத்தைப் பத்தாந் திருமுறையாகவும், நாயன்மார்