பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

சேக்கிழார்

இத்தகைய பெயர் தெரியாத புலவர் ஒருவர் கூறிய சேக்கிழார் புராண வரலாற்றில் காணப்படும் சிந்தாமணி பற்றிய செய்தியும் அநபாயன் கேள்விகளும் உண்மைக்கு முற்றும் மாறானவை என்பதறிக.

உண்மையாதாக இருக்கலாம்?சைவ நன்மரபில் வந்த அநபாயன், நாயன்மார் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றை அறிந்திருக்கலாம். அவனுடைய முதல் அமைச்சரான சேக்கிழார் சைவக்குடியிற் பிறந்தவர் இலக்கண இலக்கியங்களைப் பழுதறப்படித்தவர் சைவத் திருமுறைகளையும் தம்காலத்துச் சைவ சித்தாந்த நூல்களையும் நன்கு கற்ற விற்பன்னராவர். அவர் சோழர் முதல் அமைச்சரானதும், தமது பதவியின் காரணமாகப் பெருநாடு சுற்றியபொழுது, பல கோவில்களைத் தரிசிக்கும் வாய்ப்பு அவர்க்கு இயல்பாகவே ஏற்பட்டது. அப்பொழுது அவர் நாயன்மார் வரலாறு பற்றிய பல குறிப்புகளைத் தொகுத்திருத்தல் கூடும்.

இங்ஙனம் நாளடைவில் அவர் நேரிற் கண்டும் வல்லார்வாய்க் கேட்டும். தம்காலத்து இருந்து இன்று இறந்துபட்ட பல நூல்களைப் படித்தும் நாயன்மார் வரலாற்று உண்மைகளை ஒருவாறு செப்பஞ் செய்து வைத்திருத்தல் கூடும். அக்குறிப்புகளை வாழையடி வாழையாகச் சைவ நன்மரபில்வந்த அநபாய சோழன்,இளவரசனான இராசராசன் வாயிலாக அறிந்து, சேக்கிழாரைக்கொண்டே நாயன்மார் வரலாறுகளைக் கேட்டு அறிந்திருக்கலாம். அங்ங்னம் கேட்டு அறிந்து மகிழ்ந்த அப்பரம பக்தன், அடியார் வரலாற்றுக் குறிப்புகள் அரும்பாடுபட்டுத் தொகுத்துவந்த சேக்கிழாரே அவற்றை விரிவான முறையில் ஒரு புராணமாகப் பாடத்தக்கவர் என்று எண்ணி, அங்ஙனமே புராணம் பாடித் தருமாறு