பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சேக்கிழார்

3. 'சம்பந்தர் பாண்டிய நாட்டிலிருந்து மீண்டு சோழநாட்டு வழியே வருகையில் திருக்களர், பாதாளிச்வரம் இவற்றைப் பணிந்து முள்ளியாற்றைக் கடந்தார், கொள்ளம்பூதூரை அடைந்தார். பின்னர்ப் பல தலங்களைப் பணிந்து திருநள்ளாறு சென்றார். பிறகு தெளிச்சேரி பணிந்தார். அங்கிருந்து திருக்கடவூர் பிரயாணமானார், வழியில் போதிமங்கை என்ற பதியில் புத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்றார்’ என்பது சேக்கிழார் கூற்று. இத்தலங்கள் முறையே தெற்கிலிருநது வடக்கு நோக்கி இருத்தலும், போதி மங்கை இருக்கும் இட அமைப்பும், முள்ளியாற்று நிலையும் பிறவும் இன்றளவும் உண்மையாகக் காண்கின்றன.

தங்கும் தலைமை இடங்கள். 'அப்பர் தமது யாத்திரையில் சில முக்கியமான தலங்களில் தங்கி, அங்கிருந்து நாற்புறங்களிலும் அண்மையில் உள்ள கோவில்களைத் தரிசித்துக்கொண்டு மீட்டும் தாம் தங்கிய தலைமைத் தலத்திற்கே வந்து சேர்ந்தனர். இங்ங்னமே சம்பந்தரும் சுந்தரரும் தமது தல யாத்திரையின்போது பல பதிகளைத் தங்கும் தலைமை இடங்களாகக் கொண்டனர் என்பது சேக்கிழார் கூறும் விவரம் ஆகும். இங்ஙணம் சேக்கிழார் செப்பியுள்ள ஒவ்வொரு தலைமை - இடமும் அதனைச் சுற்றியுள்ளபதிகளும் இன்றளவும் எவ்வித மாறுதலும் இல்லாமல் இருத்தல் கவனித்து மகிழத் தக்கது.

யாத்திரை வழிகள். அப்பர். சம்பந்தர். சுந்தரர் யாத்திரைசெய்த வழிகளைச்சேக்கிழார் குறித்துள்ளார். அப்பர் திருப்பழனத்திலிருந்து காவிரித் தென்கரையே சென்று திருநல்லூரை அடைந்தார். சம்பந்தர்