பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் I 1-1 இட் | நயினார் கோவில் கல்வெட்டு கல்வெட்டு எண் 28 ல் சொல்லப்பட்ட நயினார் கோயில் திருப்பணிகளை மேற்கொண்டவர்கள் பற்றிய கல்வெட்டு இது. இந்தக் கல்வெட்டும் முதலில் சொல்லப்பட்ட கல்வெட்டின் அருகிலேயே பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டிலிருந்து கோயிலின் சீரனோத்தாரனப் பணிகளை மேற்கொண்ட சிவபிராமணர், திருப்புத்துர் வட்டம் திருப்புத்துரை அடுத்த சிராவயலைச் சேர்ந்த குண்டல தீச்சதர் மகன் மீணய்யன் என்ற விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திருப்பணிக்கு சம்பந்தப்பட்ட கல் வேலைகளைச் செய்த கல்தச்சர் நமசிவாய ஆசாரி மகன் முத்துக் கருப்பன் ஆசாரி. இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1784. இந்தக் கல்வெட்டு கருவறையின் (அதே சுவரில்) அதிட்டான முப்படைக்