பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 கல்வெட்டுக்கள்= = தேவாலயத்தினர் பெற்றுக் கொள்வதற்காக சேதுபதி மன்னர் உத்தரவிட்டதையும் இந்தக் கல்வெட்டு வாசகம் தெரிவிக்கிறது. இந்த தானசாசனம் பற்றிய செய்தியைக் கொண்ட செப்புப்பட்டையம் ஒன்றும் தனியாக தேவாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு பெரியபட்டினம் முகமமதியாபுரம்' பகுதியிலிருந்து கிழக்கே கடற்கரைக்குச் செல்லும் வழியில் ஒரு தோட்டத்தின் அருகில் உள்ள கல்லில் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டு அமைந்துளள தோட்டத்திலேயே இந்தக் கல்வெட்டின் நான்கு எல்கைகளில் ஒன்றினை கிழக்கு எல்கையை குறிப்பிடும் வகையில் இங்கு ஒரு புரவுக்கல் எல்லைக் கல்லாக தனியாக நாட்டப்பட்டுள்ளது. இந்த எல்லைக் கல் கல்வெட்டு வரலாற்றிற்கு ஒரு புதிய செய்தியையும் அளிப்பதாக உள்ளது. அதுவரை பாண்டிய மன்னர்களும், சேதுபதி மன்னர்களும் சிவாலயங்களுக்கு வழங்கிய நிலக்கொடையின் எல்லையைக் குறிக்கும் சூலம் பொறிக்கப்பட்ட புரவுக்கற்களை நாட்டி வந்தனர். இதே போல பெருமாளது விண்ணகரங்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையின் எல்லையைக் குறிக்க நாராயண மூர்த்தியின் சக்கரத்தை சின்னமாகக் கொண்ட திருஆழிக்கல் எல்லைக் கற்களாக நாட்டப்பட்டன. இந்த நிலக்கொடைகிறித்தவ தேவாலயத்திற்கு தானமாக வழங்கப் பட்டிருப்பதால் இந்த நிலக்கொடைக்கு கிறித்தவர்களின் புனிதச் சின்னமான சிலுவை உருவம் பொறித்த எல்லைக்கல் நாட்டப்பட்டிருப்பது தெரியவருகிறது. தமிழக நிலக்கொடை வரலாற்றிற்கு இது ஒரு புதிய செய்தியாகும். இந்தக் கல்வெட்டின் முழுமையான வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு: 1. ரவிகுல முத்து விசைய ரெகுநாத ராமலிங்க சேதுபதி காத்த தேவ 2. ரவர்கள் பிரிதிவிராச்சியம் பரிபாலனம்பண்ணியருளா நின்ற சாலிவாகன 1. டாக்டர் எஸ்.எம்.கமால் அவர்கள் எழுதிய சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994) செப்பேடு எண் 70,