பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#1 நாட்டிலிருந்து சேது நாட்டிற்குக் குடிபெயர்ந்தவர்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. மகாவித்வான் இரா. இராகவ அய்யங்கார் அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்க இதழான செந்தமிழில் வரைந்துள்ள கட்டுரை' ஒன்றில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் சோழ நாட்டிலிருந்துசேது நாட்டிற்கு வந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்துவதுடன் இவர்களது குடியேற்றம் முதலாவது குலோத்துங்க சோழரது ஆட்சியில் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். _ ஆனால் கி.பி.11ஆம் நூற்றாண்டில் இராஜராஜசோழன் தனது பேரரசுக்கனவைச் செயல்படுத்துவதற்காகப் பாண்டிய நாட்டின் மீது பெரும் படையை நடத்திப் பாண்டிய மண்டலம் முழுமையும், தனது புலிக்கொடியின் கீழ் கொண்டு வந்தான் என்பது வரலாறு, இந்தப் படையெடுப்பின் போது சோழ நாட்டுப்படை அணிகளுக்கு தலைமை தாங்கி வந்த வீரமறவர்கள் நாளடைவில் மூன்றாம் குலோத்துங்க சோழனது காலத்தில் சோழப் பேரரசு சிதைந்த பொழுது பாண்டிய நாட்டில் ஆங்காங்கு செருக்குடன் வாழ்ந்த சோழ நாட்டுத் தலைவர்களான மறவர்கள் சுயேட்சை பெற்றுத் தங்களைத் தன்னரசு மன்னர்களாக அறிவித்துக கொண்டனர் என்பதுதான் பொருத்தமான வரலாற்றுணகமாகும். முதலில் இந்தப் புதிய மன்னர்கள் கானாட்டில் திருமெய்யம் பகுதியில் நிலைகொண்டிருந்து பின்னர் தெற்கே _ இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தின் வடக்குப்பகுதியில் விரையாத கண்டன் என்ற ஊரில் நிலைகொண்டிருந்தனர்"என்பதைப் புலப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் அண்மையில் கிடைத்துள்ளன. _ டி முதலாவதாக திருமெய்யம் கோட்டை நகரைப்பற்றிய ஆய்வுரையை தொகுத்த புதுக்கோட்டை மன்னர் கலைக்கல்லூரிப் பேராசிரியர் விஸ்வநாதன் என்பவர் தமது ஆய்வுரையில் திருமெய்யம் கோட்டையைநிர்மானித்தவர் இராமநாதபுரம் மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதி.(கி.பி.1680-1710) என்றும் இந்த மன்னருக்கு முன்னால் கி.பி.12ஆம் நூற்றாண்டில் முத்து வயிரிய முத்துஇராமலிங்க சேதுபதி என்பவர் இந்த கோட்டையின் உள் மதிலை 1. சமஸ்தான மகாவித்வான் ரா. ராகவஐயங்கர்-செந்தமிழ் (1905)