பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் - - அமைத்தார் என்றும், அந்த விவரம் திருமெய்யத்தை சார்ந்த குடிமகன் ஒருவரிடம் இருந்த செப்பேட்டில் இந்த விவரம் குறிக்கப்பட்டிருப்பதைப் புதுக்கோட்டை அரசு தர்பார் ஆவணங்களைச் சார்ந்ததாக மேற்கோள் காட்டி வரைந்து இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.' மேலும் திருமெய்யத்தை தலைமை இடமாகக் கொண்டிருந்த இந்த மறவர் தலைவர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் மேலும் தெற்கே சென்று இன்றைய இளையான்குடி வட்ட சாலைக் கிராமத்திற்கு வடக்கே உள்ள விரையாத கண்டன் என்ற கிராமத்தில் கி.பி.1600 வரை இருந்தனர் என்பதை பிற்காலச் சேதுபதி மன்னர்கள் அளித்துள்ள பல செப்பேடுகளிலிருந்து அறிய முடிகிறது." மற்றும் இந்த மறவர் தலைவர்களில் வீரமும் புகழும் உடையவராக விளங்கிய ஜெயதுங்கன் என்ற மறவர் தலைவரை கி.பி.16ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் மதுரை மாநகரில் மதுரை நாயக்க அரச பரம்பரையைத் தோற்றுவித்த விசுவநாத நாயக்கர் சூழ்ச்சியால் ஜெயதுங்கனைக் கொன்று ஒழி, ததுடன் அந்தப் புதிய தன்னரசு தடுமாறி நிலைகுலைந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு ஜெயதுங்க தேவர் வழியினரான உடையான் சடைக்கன் சேதுபதி மீண்டும் அந்த தன்னரசை இன்றைய பரமக்குடி வட்டத்தில் அமைந்துள்ள புகலூர் என்ற சிற்றுரில் கி.பி.1603-ல் ஏற்படுத்தினார். புகல் என்றால் புகுதல் என்றும் அடைக்கலம் பெறுதல் என்ற பொருளைத் தருவதாகும். உடையான் சடைக்கன் தேவர் சில பல இடர்ப்பாடுகளுக்குப் பின்னர் விரையாத கண்டனிலிருந்து இந்தப் புதிய கிராமத்தில் புகலிடம் பெற்றார் என்பதின் காரணமாக இந்த ஊருககுப் புகலூர் என பெயர் ஏற்பட்டு இருத்தல் வேண்டும் என்பது பொருத்தமான காரணமாகும். இந்த புதிய ஊரினைத் தலைமை இடமாகக் கொண்ட மன்னர்கள் தான் சேதுபதிகள் என்று தொடர்ந்து அழைக்கப்பட்டனர். 1. Prof K. Viswanathan (M.Phil. Thesis) Thiru Maiyyam The Fort toron (1974) 2. கமால் S.M.Dr. - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993) - பக்கம் 3. Sathyanatha Iyer - History of Madura Nayaks - Introduction (1924)