பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் – இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு ஐந்து கிராமங்களை தானம் வழங்கிய செய்தியையும் கொண்ட கல்வெட்டுக்களைக் குறிப்பிடுவதில் இருந்து சேதுபதி மன்னர்களது ஆட்சி 15-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியில் நீடித்து வந்த விபரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. அடுத்து 15-ம் நூற்றாண்டில் இலங்கை யாழ்ப்பாணத்தில் நல்லூர் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட கந்தசாமி கோயிலுக்கு ஆகமமுறைப்படி பூஜைகள் நடத்துவதற்காக சிவபிராமணர்கள் தேவைப்பட்டனர். இதனையாழ்ப்பாண மன்னரான ஆரியச்சக்கரவர்த்தி சேதுபதி மன்னருக்குத் தெரிவித்து, சேது நாட்டில் இருந்து நாளைந்து சிவபிராமணர்களை அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். இதனை ஒட்டி இராமேஸ்வரத்தில் இருந்து ஐந்து பிராமணர்களை நல்லூருக்கு அனுப்பி வைக்கப்பட்ட செய்தியினை 15-ம் நூற்றாண்டின் சிற்றிலக்கியமான முத்துராசக் கவிராயரது "கைலாய மாலை" குறிப்பிடுவது மற்றொரு சான்றாகும். தொடர்ந்து 16-ம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் கிழக்குப் பகுதியில் வேதாளை என்ற கிராமத்தில் ஒரு கோட்டையை கட்டிக்கொண்டு இராமேஸ்வரம் செல்லும் பயணிகளுக்கு மிகுந்த :தொல்லைகொடுத்து வந்தனர். அப்போது இருந்த சேது மன்னர் மதுரையின் மெகாமண்டலேஸ்வராது படை உதவி பெற்று போர்ச்சுக்கீசியர்களை கி.பி.1547ல் விரட்டியடித்த செய்தியினை "ஆசிரியர் ஹீராஸ் பாதிரியார் தமது Aravidu Dynasty என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதும் மற்றொரு சான்றாகும். இந்த் மன்னர்களது காலத்தில் சேதுநாடு என்பது இராமேஸ்வரம் தீவையும், அதற்குமேற்கே உள்ள சில பகுதிகளை மட்டுமே குறிப்பதாக அமைந்து இருந்தது. அதாவது பிற்காலப் பாண்டியர்களது ஆட்சியில் அமைந்திருந்த இப்பகுதி - கோடிநாடு. கீர் செம்பிநாடு வடக்கே செவ்விருக்கைநாடு, பொலியூர் நாடு, கைகிநாடு, வடவிருக்கை நாடு, வடதலைச் செம்பி நாடு, புனல்பறளை நாடு,