பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சேதுபதி மன்னர் சாதனைகளைப் புரிந்து வந்துள்ளனர். இதற்குச் சான்றாக இன்றும் நிலைத்து நின்று அவர்களது பெரும் புகழைப் பறைசாற்றும் பெரும் சின்னங்களாக விளங்குபவை தான் இராமேஸ்வரம், திருப்புல்லாணி, திரு உத்தரகோசமங்கை, காளையார் கோவில், திருவாடானை, திருப்பெருந்துறை, திருப்புத்துர், திருக்கோஷ்டியூர், நாட்டரசன்கோட்டை, திருக்கொடுங்குன்றம் ஆகிய தலங்களில் அமைந்துள்ள திருக்கோவில்களாகும். கோயில் திருப்பணிகள் : குறிப்பாக இராமேஸ்வரம் திருக்கோயில் நமது நாட்டின் மிகச் சிறந்த புனிதத் தலமாக ஏற்றிப் போற்றப்படுவதுடன் நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வடமாநிலங்களில் இருந்து இந்தக் கோயிலுக்கு வருகை தந்து பக்திப் பூர்வமாகத் தங்களது நேர்த்திக் கடன்களைச் செலுத்தி நிம்மதியும் ஆறுதலும் கொள்வதை யாவரும் உணர முடியும். இந்தக் கோயில் கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தராலும், திருநாவுக்கரசு சுவாமிகளாலும் பாடிச் சிறப்பிக்கப்பட்ட பொழுது மிகச் சிறிய கற்றளியாக விளங்கியது. கடந்த பல நூற்றாண்டுகளில் குறிப்பாக 17, 18, 19வது நூற்றாண்டுகளில், சேது நாட்டின் அதிபதிகளாக விளங்கிய சேது மன்னர்கள் காண்பவர் வியப்படையும் வண்ணம் இராமேஸ்வரம் திருக்கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானமான உலகப்புகழ் பெற்ற மூன்றாவது பிரகாரத்துடன் அமைந்திருப்பது யாவரும் அறிந்த ஒன்று. இந்தச் சிறந்த திருப்பணியை வழிவழியாக மேற்கொண்டு நிறைவு செய்திருப்பதுடன் இந்தக் கோயிலின் நாள்தோறும் வழிபாட்டிற்கும், ஆறுகால பூஜைக்கும் கட்டளைகளுக்கும், மாத ஆண்டு விழாக்களுக்கும், உதவும் வகையில், பல ஊர்களின் வருவாய்கள் இந்தக் கோயில்களுக்குக் கிடைக்குமாறு அந்த