பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1B சேதுபதி மன்னர் இஸ்லாமிய துறவியின் அடக்கவிடத்தில் கந்துரி முதலியன ஆண்டுதோறும் நடத்துவதற்கும், அழியாபதி, குணபதிமங்கலம் ஆகிய இரு ஊர்களை சர்வமான்யமாக வழங்கிச் சிறப்பித்துள்ளார்.' இவரை அடுத்து சேதுபதி மன்னர் பட்டத்தைத் தாங்கிய கிழவன் ரெகுநாத சேதுபதி என்பவர் சேது நாட்டின் சிறுபான்மை குடிமக்களான இஸ்லாமிய மக்களது தொழுகைப் பள்ளிகளுக்காக திருச்சுழியினை அடுத்த காரேந்தல், கமுதியை அடுத்த பொந்தாம்புளி, இராமநாதபுரத்தை அடுத்த நாரணமங்கலம் ஆகிய ஊர்களில் நிலங்களை சர்வமான்யமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தான நிலமான்யக் கணக்கு தெரிவிக்கின்றது. இந்த மன்னர் சேது நாட்டில் சிறுபான்மையினரும், வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்களுமான இஸ்லாமியப் பெருமக்களுக்குப் பல சலுகைகளை வழங்கி மகிழ்ந்ததுடன் அவர்களில் வலிமையும் வீரமும் நிறைந்தவர்களைத் தமது அரசுப் பணியில் நம்பிக்கைக்கு உரிய காவல்குடியினராக அமர்த்தி இருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். திரு உத்தர கோசமங்கை திருக்கோயிலுக்கு வழங்கிய தான சாசனம் ஒன்றில் இந்த முஸ்லிம் மக்களை "நமது காவல் குடியினரான" என்று உரிமையுடன் குறிப்பிட்டு இருப்பது ஆராயத்தக்கது. மேலும் கீழக்கரை பெரும் நகரில் வாழ்ந்த சீதக்காதி மரைக்காயரைக் கிழவன் ரெகுநாத சேதுபதி தமது உடன் பிறவாச்சகோதரராக மதித்துப் போற்றி வந்ததும், அரசியல் அலுவல்கள் அனைத்திலும் சீதக்காதி மரைக்காயரநல்லுரையைக் கேட்டு அதன்படி நடந்து வந்தார் என்பதை டச்சு கிழக்கிந்ததிய கம்பெனி ஆவணங்கள் சான்று பகர்கின்றன. சேது நாட்டின் கடற்கரைப் பகுதிகள்ல் அரசருக்காக வரி வசூலிக்கும் பொறுப்பைச் சீதக்காதி மரைக்காயர் பெற்றிருந்தார் என்பதுடன், பாம்பன் நீர் வழிப் போக்கில் வணிக கப்பல்களின் நடமாட்டத்தையும் அவரே கண்காணித்து வந்தார் என்பதும் தெரிய வருகிறது. பல காலமாகச் சேது மன்னர்களின் தலைநகரான புகலூர், நாட்டுப்புறப் பகுதியில் ஒரு குக்கிராமமாக அமைந்திருந்ததை விட்டு 1. Copper Plates of Regunatha Thirumalai Sethupathi 2. எஸ்.எம். கமால் Dr. -செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (2000) - பக்கம்