பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 கல்வெட்டுக்கள் நடவடிக்கையினால் மகிழ்ச்சியுற்ற முத்துக் கிருஷ்ணப்பநாயக்க மன்னர் உடையான்சடைக்கன் சேதுபதிக்கு தளவாய்" என்ற சிறப்பு விருதினை வழங்கினார். இந்த விருது தொடர்ந்து இரண்டாவது சடைக்கண் சேதுபதியின் பெயருடன் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனப்பணிகளில் தளவாய் சேதுபதி மிகவும் அக்கறையுடன் ஈடுபட்டிருந்ததற்குச்சான்றாக அமைந்துள்ளது.அவரது இந்த முதலூர்க் கண்மாய்க் கல்வெட்டாகும். இன்றைய பரமக்குடி வட்டம் முந்தைய சேது நாட்டில் செவ்விருக்கை நாட்டு மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. வைகை ஆற்றின் பிரதான காலான நாட்டார் கால் செல்லும் பகுதியில் இந்த மன்னர் ஒரு கண்மாயை அமைத்ததையும், அதில் கலுங்கு ஒன்றும், மடைகள் இரண்டும் அமைக்கப்பட்டதை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன் காலம் கி.பி.1637 ஆகும். கலுங்கு என்பது கண்மாயின் தாழ்வான பகுதியில் கண்மாயிலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்படும் கட்டுமானம் ஆகும். இந்தக் கலுங்கில் பல கண்கள் அமைக்கப்பட்டும் அவைகள் அனைத்தும் ஒரே நேரத்திலோ அல்லது தனித்தனியாகவோ அல்லது தேவைப்படும் பொழுதிலோ வேண்டிய நீரை வெளியேற்றுவதற்கும் அடைப்பதற்கும் (பெரும்பாலும் மரக்கட்டைகளால்) தடுப்பு அமைக்கப்படுவதாகும். - இதனைப் போன்றே கண்மாயின் கரையை அடுத்துள்ள வயல்களுக்கு நீர்பாய்ச்சுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்படுவது மடை எனப்படும். பெரும்பாலும் இந்த அமைப்பு சுட்ட செங்கலினால் கட்டடப்பட்டு வருகிறது. இதனைக் கலுங்கில் ஒரு சிறு பகுதியாகக் கொள்ளலாம். புதுக்கோட்டை சீமையில் இந்த மடை குமிழி என வழங்கப்படுகிறது. இந்த மடையை ஒட்டிச் சில இடங்களில் மக்கள் குடியிருப்புகளும் அமைதல் உண்டு. சேதுபதிச் சீமையில் சக்கரக்கோட்டை கண்மாய் அடுத்துள்ள ராஜசூரிய மடை என்று ஒரு