பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்வெட்டுக்கள் - - கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்த அறிவிப்பினுக்கு மாற்றமாக சுவாமிக்கு உரியமேலே கண்ட பணத்தையும், நெல்லையும் கொடுக்காமலும், அவைகளைத் தானே அனுபவித்துக் கொண்டவன் கெங்கைக் கரையிலே காராம் பசுவையும் மாதா, பிதாவையும், குருவையும் கொன்ற பாவத்திலேபோகக் கடவான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதம் சுவாமிக்குச் செலுத்தவேண்டிய நெல் முதலியவைகளைக் கொடுக்காமல் இருப்பதை அனுமதித்து அதற்காகக் கைக்கூலி பெற்றவனை இந்தக் கல்வெட்டில் மிகவும் கடுமையாகவும், கீழான சொற்களினாலும் குறிக்கப் பெற்றுள்ளது.இந்த சொல் இன்றளவும் இந்தப் பகுதியில் வாக்கில் இருந்து வருகிறது. மேலும் இத்தகைய இழிய செயலைச் செய்தவன் தனது வீட்டுப் பெண்களைத் தவறான பாவ காரியங்களில் ஈடுபடுத்தியவனாகக் கடவன் எனக் கடுமையான முறையில் இந்த ஒம்படைக்கிளவியாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக கல்வெட்டின் இறுதிப்பகுதி அழிந்து படிக்க முடியாத அளவு சிதைவு அடைந்துள்ளது. அந்தக் காலத்தில் பசுவை வதைப்பதும், பெற்ற தாய் தந்தையையும், கற்றுக் கொடுத்த குருவையும் கொல்வதும் மிகப் பெரிய பாவமாகக் கருதப்பட்டது என்பதும் தெரியவருகிறது. இந்தக் கல்வெட்டின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கைக்கூலி என்ற சொல் இந்தப் பகுதியின் வட்டார வழக்கு கைக்கூலி என்பது கையூட்டு, அல்லது லஞ்சம் என்பதை குறிப்பதாகும். மேலும் இந்தக்கல்வெட்டில் திருவாடானை திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனின் பெயர் ஆடானை நாயகர் என நல்ல தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தலத்தில் ஆடும், யானையும், இறைவனை வழிபட்டு முக்தி அடைந்த காரணத்தினால் இந்தக்கோயில் இறைவருக்கு ஆடானை நாயகர் என்ற பெயர் ஏற்பட்டு இருப்பது என தலபுராணம் விளக்குகிறது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், இந்த இறைவரைத் தேவாரம் பாடிச் சிறப்பித்துள்ளனர். அவர்களது பதிகங்களில் இந்தக் கோவிலின்