பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

В 2 - – - - - :சேதுபதி மன்னர் தெற்கு ஆக இசைந்த பெருங் நாங்கெல்லைக்குட்பட்ட நத்தமும் உட்பட்ட நிலம். இந்த எல்லைக் குறிப்புகளிலிருந்து சேதுபதிச் சீமையின் நிலம், நீர் சம்பந்தப்பட்ட பல வட்டாரச் சொற்கள் வழக்கில் இருந்ததைக் காணமுடிகிறது. குறிப்பாகக் கண்மாயின் தொடர்ச்சி எனப் பொருள்படும் நீர்க்கோவை, வாய்க்கால் நீரினைக் கண்மாயிலிருந்து வயலுக்கு நீரை எடுத்துச் செல்லும் கால்வாய்க்கால் எனவும், சிறிய நீர்த்தேக்கம் குண்டு எனவும், சிறிய நீர்த்தேக்கம் குளப் பரப்பு எனவும், தேங்கியுள்ள நீரின் அதிக பட்சமான பரப்பினைக் குறிப்பது நீர்ப்பிடி எனவும் கண்மாய்க் கரையின் கடைசிப் பகுதி கடைக்கொம்பு எனவும், ஊரின் எல்லையைக் குறிக்கும் பகுதி புரவு எனவும் இதனை அறுதியிட்டுக் குறிப்பிடுவதற்காக நாட்டப்பட்ட எல்லைக்கல் புரவுக்கல் எனவும் மடங்களுக்கு மன்னர்கள் வழங்கிய நிலக்கொடை மடப்புரம் எனவும், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்வதற்காக இருவேறு நிலங்களுக்கு இடைப்பட்ட வழி வழிப்பாதை எனவும் பெரும்பாலும், நடந்து செல்வதற்கென்றே பயன்பட்ட பகுதி ஒற்றையடிப் பாதை எனவும் வழ்ங்கப்பட்டு வந்தன. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படாமல் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட நிலப்பகுதி பொட்டல் எனவும், மக்கள் கூடி வாழும் குடியிருப்பு பகுதி நத்தம் எனவும். வழங்கப்பட்டு வந்தன. தேவதானம் என்பது கோயில்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலக்கொடை ஆகும். இந்தக் கல்வெட்டில் ஒம்படைக்கிளவியாக இந்த தர்மத்திற்கு விகாதம் பண்ணியவர்கள். "கங்கைக் கரையிலே பசவைக் கொன்ற பாவத்திலே போவாராக" என்று குறிப்பிடப்படுவதிலிருந்து பசுவும், கங்கையும் இந்து