பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B4 =சேதுபதி மன்னர் l இயல் 16 | ஆலம்பட்டிக் கல்வெட்டு இந்தக் கல்வெட்டும் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னரால் மதுரை மாவட்டம் மேலுர் வட்டம் சொக்கலிங்கபுரம் அருகேயுள்ள ஆலம்பட்டிகிராமத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் 15.11.1668 ஆகும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரியில் அமைந்திருப்பது சேவுகப் பெருமாள் ஐயனார் ஆலயம். இந்த ஐயனார் இந்த வட்டாரத்திலே மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக இன்றும் கருதப்பட்டு வருகிறார். இந்த ஆலயத்தின் பயன்பாட்டிற்காக சேதுபதி மன்னர் ஆலம்பட்டி கிராமத்தை முழுமையாக தானம் வழங்கி இருப்பதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இன்றைய நிர்வாக அமைப்பில் இந்த ஊர் மதுரை மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், திருமலை ரெகுநாத சேதுபதி காலத்தில் சேதுபதி சீமையின்