பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 77 - ஜமீன்தாரியாக மாற்றப்பட்ட பொழுதும் இவர் இராமநாதபுரம் ஜமீன்தாருக்குக் கட்டுப்பட்டவராக இருந்து வந்தார் என்றாலும் இராமேஸ்வரம் நகரில் திருக்கோயிலுக்குச் சொந்தமான மனை களில் குடியிருந்தவர்களை குத்தகைப் பாக்கிக்காக வெளியேற்றம் செய்யும் உரிமை ஜமீன்தாரைப் போல இந்தப் பண்டாரத்துக்கும் இருந்து வந்தது. சேதுராமநாத பண்டாரத்தை மதுரை ஜில்லா கலெக்டர் நியமனம் செய்ததை எதிர்த்துக் கும்பினியாருக்கு இராமநாதபுரம் ஜமீன்தார் மறுப்புத் தெரிவித்தார். தமது கடமை களை அவர் முறைப்படி செய்யவில்லையென கும்பினியாருக்கு இராமநாதபுரம் ஜமீன்தார் புகார் ஒன்றினை அனுப்பினார். இவைகளை விசாரித்த சர்க்யூட் கோர்ட்', பண்டாரத்திற்குத் தண்டனை விதித்துச் சிறையில் அடைத்தது. கி.பி. 1804ல் இலங்கையில் இருந்து இராமேசுவரம் வந்த ஜார்ஜ் வாலண்டினா என்ற ஆங்கிலேயர் அப்பொழுதிருந்த வயதில் மிகவும் இளையவ ரான பண்டாரத்தினைச் சந்தித்த விபரங்களை அவரது பயணக் குறிப்பில் பதிவு செய்துள்ளார். இந்தப் பண்டாரத்தின் செயல் பாட்டில் உள்ள குறைபாடுகளினால் கி.பி. 1898ல் மதுரை மாவட்ட நீதிமன்றம் இராமநாத பண்டாரம் பதவியை நிரந்தர மாக நீக்கிவிட்டு அறங்காவலர் குழுவினை இந்தக் கோயிலுக்கு ஏற்படுத்தியது. அந்தக்குழு பல்வேறு அரசியல் நிலைமைகளில் பல மாற்றங்களுடன் இன்றும் தொடர்ந்து வருகிறது. மடைக்கிடாய் முக்கந்தர் மடையுடன் சம்பந்தப்பட்ட முக்கந்தர் என்பவர் இடைக் குலத்தைச் சேர்ந்தவர். முகுந்தன் என திருமாலைக் குறித் கும் சொல் வழக்கில் முக்கந்தராக மாறியுள்ளது. பருவகாலக் தில் மழை பெய்து மறவர் சீமையின் கண்மாய்கள் நிரம்பிய வுடன் நஞ்சையில் விவசாயம் தொடங்குவது இயல்பு. வேளாண் மைக்குக் கண்மாய்த் தண்ணிரை முதன் முறையாக மடைவழி திறப்பதற்கு நாளும் நேரமும் குறிப்பிடுவது உண்டு. ஆட்டுக் கிடாய் ஒன்றினை அந்த மடையருகில் பலியிட்ட பின்னர் மடைக் கட்டைகளை நீக்கி - நிலங்களுக்கு தண்ணிர் தடையில்லாமல் 24. Tamilnadu Archives - Madurai Dist Records.-Vol. 8900/ 7.3.1834– P. 83 Vol 8902/5.5.1835 pp 315-316 25. George Valentine-History of East indies (1805)