பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T O2 எஸ் எம். கமால் தரிசிக்க வந்து சென்றனர் என்பதை ஊகிக்க முடிகிறது. இதனை உறுதிப்படுத்துவதுபோல கும்பினியாரது ஆவணங்களில் இருந்து சில செய்திகள் கிடைத் துள்ளன. மராட்ட மாநிலத்தில் இருந்து, குறுநிலமன்னர் ஒருவர் ஆண்டுதோறும் இராமேசுவரம் இறைவருக்குச் சாத்துவதற்காக பட்டு முதலிய உயர்ந்த பொருள்களை அனுப்பி வந்தார் என்றும் அவைகளை இராமேசு வரம் நகர் எல்லையில், கோயில் அறங்காவலர் மிகுந்த மரியாதை யுடன், வரவேற்று பெற்று வந்தனர் என்பது ஒரு செய்தி. இன்னொரு ஆவணத்தின்படி திருவாங்கூர் மன்னர் இராமேசுவரம் திருக்கோயிலில் உதயமார் தாண்ட கட்டளை என்றதொரு நிவந்தத்தை ஏற்படுத்தி இருந்தார் என்றும், ஆண்டிற்கு இருமுறை கோயில் பட்டர் திருவாங்கூர் சென்று இந்தக் கட்டளைக்கான பொருளையும், பட்டு ஆடை களையும் நேரில் பெற்று வரும் வழக்கம் இருந்து வந்ததும் தெரிகிறது. இந்தக்கட்டளையை பதினாறாவது நூற்றாண்டுத் தொடக்கத்தில் திருவாங் கூரில் ஆட்சி செலுத்திய உதய மார்த்தாண்ட ரவிவர்மன் என்ற மன்னன் ஏற்படுத்தி இருக்க வேண்டும் . மேலும், சாளுக்கிய மன்னன் கிருஷ்ணா III கி.பி, 910லும், ஹொய்சாள மன்னர் வீரபல்லாளா 11 (கி. பி. 1342) ஆந்திர பேரரசர் நரசிம்மா (கி. பி. 1408) கிருஷ்ண தேவராயர் (கி. பி. 1517) அச்சுதராயர் (கி. பி. 1532) மற்றும் விஜயநகரதண்ட நாயகர்களும் இராமேசுவரத்திற்கு வருகை தந்த செய்திகள் உள்ளன. ஆனால் ஆந்திரத்திற்கு அப்ப்ால் நர்மதை நதிக்கு வடக்கே உள்ள அன்றைய ஐம்பத்து ஆறு தேசங்களில் இருந்து சிறப்பான மக்கள் யாரும் இராமேசுவரம் திருக்கோயிலை வந்து தரிசித்ததாக முந்தைய வரலாறு இல்லை. ஆதலால், இந்தக் கோயிலுக்கு மிகுதியாக வருகை தந்த பஞ்ச தேசத்து மக்களுக்கும் மன்னர்களுக்கும் புரோகிதம் செய்ய, அந்தந்த பகுதியைச்சேர்ந்த அந்த னர்கள் பூ ஜாகராக, அமைக்கப்பட்டது இயல்பு தான். 1. Tam | nadu Archives-R - C. Vol 468 1 (A) - 1833 AD pp 427-3O Z. Madura Dist. Records - Vol. 468 1–1 5–3–1823. 3. கமால். எஸ். எம். - இராமநாதபுரம் ஆவணக்குழு செய்தி மலர் (ஏப்ரல் 1989)