பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 127 இந்தச் செப்பேடு தமிழக குற்றவியல் வரலாற்றின் சிறப்பு ஏடாக என்றும் விளங்கும் என்பதில் இயல்பு. இராமநாதபுரம் சீமையை, தென் தமிழ்நாடு முழுவதையும், பத்தொன்பதாவது நூற்றாண் டில் தங்களது உடமையாக்கிய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி யார் கி.பி. 1851ல் தான் தங்களுக்கு பல்லாண்டு பாடும் பரம்பரை யொன்று இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு ஆதரவான கனவான்களை குறிப்பிட்ட சில ஊர்களில் குற்றங்களை விசாரித்து அபராதம் வழங்குவதற்கு மட்டும் உரிமையுடைய நடுவர்களாக நியமனம் செய்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளுதல் பொருத்தமாகும். வெள்ளைப் பரங்கிகளது ஆட்சிக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னதாகக் சமுதாயச் சொத்திற்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கு சேதுபதி மன்னர் அபராதம் மட்டுமல்ல, சிறைத்தண்டனையும் வழங்கத்தக்க வண்ணம் அரசு அதிகாரத்தை சாதாரன துறவிக்ரு அதிகார மாற்றம் செய்திருப்பதும் வியப்பளிப்பதாக உள்ளது. இராமேசுவரம் திருக்கோயிலுக்குச் சொந்தமான இராமேசு வரம் தீவில் நந்தவனம் மட்டுமல்லாமல், வாழைத் தோப்பு, தென்னந்தோப்பு, இலுப்பைத் தோப்பு, பனைத் தோப்பு, ஆகிய வை இருந்த விபரமும் (வரிகள் 23) திருக்கோயிலைச் சார்ந்த பசுமடத்திலும் ஆதினகர்த்தரது மடத்திலும், பசுமாடு, எருமை மாடுகளும், பேணப்பட்டு வந்த செய்தியும் (வரி 29) செப் பேட்டில் காணப்படுகிறது. தற்பொழுது திருக்கோயிலுக்குச் சொந்தமான தென்னந்தோப்பு மட்டும் பாம்பனுக்கும் தங்கச்சி மடத்திற்கும் இடையில் உள்ளது. ஆதினகர்த்தரது இருக்கை அவரது பசுமடம், ஆகியவைகள் இருந்த இடம் அறியத்தக்க தாக இல்லை. அத்துடன், இராமேசுவரம் தீவில், இராமேசுவரம் திருக்கோயிலுக்கு கிழக்கே உள்ள அக்கினி தீர்த்தக் கரையும் வடக்கே சுடுகாட்டம் பட்டி, மாங்குண்டு அருகே கல்லடிச்சாலை, புளியடிச்சாலையும், மற்றும் தங்கச்சி மடத்திற்கு அருகே புங்கடித்துறையும், பாம்பனும் சிறிய துறைமுகங்களாக செயல்பட்ட விவரத்தையும் (வரிகள் 31-32) இந்தச் செப்பேடு தெரிவிக்கிறது. இன்னொரு செய்தி, இராமேசுவரம் தீவில் முன்னர் புளி புங்கை மரங்கள் மிகுதியாக இருந்த காரணத்தினால் புளியடி’ புங்கடி என்ற பெயர்களில் துறை முகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 1964ல் ஏற்பட்ட