பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 129 =---- மற்றும், பட்டயத்தின் வரிகள் 27-28ல் கள்ளரைப் அண்டாரம் காவல்பண்ண வேண்டுமென்று, கொல்லன் தச்சனை அழைக்கச் சொன்னால் ... ' என்ற தொடரில் இருந்து, இராமேசுவரத்தில் குற்றவாளிகளை அடைத்து வைக்க £6.5 p எதுவும் இல்லையென்றும், பிடிப்பட்ட கள்ளரை சங்கிலியில் பிணைத்து விலங்கிடுவதற்கு கொல்லனும், தக்க பாதுகாப்பான அறையில் இருத்தி, அடைத்து வைக்க தச்சனும் தேவைப் பட்டனர் என்பதும் விளக்கப்படுகிறது. பட்டயத்தின் இறுதியில் (வரிகள் 37-40) அபிமானிச்சு, சுகிர்தம், தீர்த்தம், கன்னியாதானம், பூமிதானம், அக்கிரகாரம் தோஷம், அகிதம், மாதாபிதா, பிரும்மகத்தி ஆகிய வடசொற்கள் இயல்பான தமிழ்ச் சொற்களைப் போல பயன்படுத்தி உள்ளது அன்றைய மணிப்பிரவாள தமிழ்வழக்கை நினைவு படுத்துவ தாக உள்ளது.