பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 141 மன்னர் ட்சிக்காலம் தொடங்கி இராமேசுவரம் திருக்கோயில் நிர்வாகமும் முறையாக நடந்து வந்தது. ஆதலால் மதுரை நாயக்க மன்னருக்கும் இந்தக்கோயில் நிர்வாகத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. திருமலை நாயக்க மன்னர் கி.பி. 1623ல் அரசுரிமை பெற்றதில் இருந்து கி. பி. 1635 வரை அவர் திருச்சிராப்பள்ளியைக் கோ நகராகக் கொண்டு அங்கேயே இருந்து வந்தார். இந்த இசைவுமுறி எழுதப்பட்டபொழுதும் (கி.பி. 1631ல்) அவர் திருச்சியில் தான் இருந்தார். பின்னர், மதுரையைத் தலைநகராகக் கொண்டு இருந்தபொழுதும். மதுரைக்கு கிழக்கே நூறுகல் தொலைவில் உள்ள இராமேசுவரத் திற்கு ஒருமுறை கூட அவர் வருகை மேற் கொள்ளவில்லை. அன்றி, அங்கு அவர் எவ்வித திருப்பணியோ திருவாபரணமோ அளிக்கவில்லை யென்பதை வரலாற்று ஆவணங்கள் உறுதிப் படுத்துகின்றன. ஆதலால் இந்த இசைவுமுறி, சேதுபதி மன்னரது ஆணை யின் பேரில் தான் வரையப்பட்டது என்பதை இந்த செப்பேட்டின் இன்னொரு பகுதி (வரிகள் 22-23) யில் கண்டுள்ள தொடர் ராச முத்திரைக்கு உட்பட்டு, நடவாமல் இருந்தாலும் அரண்மனைக்கு ஆயிரத்து இருநூறு பொன்னும் இறுத்து, எங்கள் காணியாட்கி யும் இழந்து போகக்கடவோமாகவும்' என்றும் தளவாய் சேதுபதி காத்த தேவர்களாணையே தப்பாது...' (வரி 24) என்றும் செப்பேட்டு வாசகம் இந்த உண்மையைத் தெளிவு படுத்துவதாக இருக்கிறது. இராமேசுவரம் திருக்கோயிலுக்கு தலைமைக் கண்காணிப் பாளராக, சைவ பண்டாரத்தை 'இராமனாத பண்டாரம்’ ’ என்ற பொதுப் பெயரில் மன்னர் முதலாம் சடைக்கன் சேதுபதி நியமித்து இருந்த பணியில், கூத்தன் சேதுபதி ஆட்சிக்காலத்தில், பண்டாரம் இல்லாத நிலையொன்று ஏற்பட்டது போலும் கோயில் நிர்வாக கண்காணிப்பு இல்லாது செவ்வனே நடை பெற வேண்டும் என்ற நோக்கில், கோயில் குருக்களைக் கட்டுப்படுத்தி தத்தம் கடமைகளை நிறைவேற்றச் செய்வதற்காக இந்தப் பிடிபாடு கைச்சாத்து பெற வேண்டியதாகிவிட்டது. எனத்தெரி 1. Sathianathaier S – History of Madurai Nayaks (1924) p. 115.