பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 எஸ். எம். கமால் ஆணையை ஏற்கனவே பார்த்தோம், (செப்பேடுஎண்.6) அவரைப் போன்று திருமலை ரகுநாத சேதுபதி வழங்கிய இந்தச் செப்பேடும், அத்தகைய தொரு ஆணையை விளக்கமாக கோயில் ஆதின கர்த்தருக்கு வழங்கியதைக் குறிக்கின்றது. ஆணையின் படி, இராமனாத பண்டாரம், மன்னரது பெரிய அய்யா (பாட்டனார்) சடைக்கன் உடையான் சேதுபதி கி.பி.1605-22 இராமேசுவரம் திருக்கோயிலுக்குத் தானமாக வழங்கிய கிராமங் களின் ஆதாயங்கள் அல்லது வருவாய்களைக் கொண்டும்.இந்த மன்னர் வழங்குகின்ற திரவியங்களைக் கொண்டுதான், மன்னரது அறக்கட்டளையை நடப்பித்து வருதல் வேண்டும். சேது நாட்டிலும் ஏனைய நாட்டிலும் இருந்து வருகிற காணிக்கை களும் உவையங்களும் நல்ல திரவியமாகும். அல்லது பாவ திரவியங்களாகவும் அமைவதற்கு வாய்ப்பு இருப்பதால், அவைகளை மன்னரது சொந்த அறக்கட்டளையில் பயன் படுத்தாமல் கோயிலின் பொதுவான உள்துறைக்கட்டளையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது மன்னரது ஆணை. மேலும் மன்னரது சொந்தக்கட்டளை ஏனைய தருமங்களைப் போன்று மன்னரது ஆத்ம திருப்திக்காவும் மறுமை இன்பத்தை நோக்கியதாகவும் உள்ளதால் இத்தகைய புனித செயலில், பாலில் கலந்து விடும் விஷம் போல, தெரிந்தும் தெரியாமலும், பாவம் சேர்ந்து விடக் கூடாது என்ற புனித நோக்கில் மன்னர் மிகவும் எச்சரிக்கையுடன் கோயில் காரியங்களை உன்னிப்பாக கவனித்து வந்தார், என்ப தற்கு இந்த செப்பேட்டு ஆணை நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. மன்னரது இத்தகைய ஈடுபாடு, உள்ளப்பாங்கு, மனச்சான்று «EITT 5IJOTLD T&!5 நம்முடைய அறைவாசலிலே இருக்கிற காரியக்காரரைக் கண்டிச்சு நடப்பித்து (வரிகள் 3233) நிலவரம் பண்ணிவிச்சு’’ (வரி34) நடப்பித்துக் கொள்ளச் சொல்லியும் (வரி 36,39,43,47) இந்தச் செப்பேட்டு வாயிலாக ஆணை வழங்கி உள்ளார். இந்த ஆணையில் கோயில் ஆதினகர்த்தருக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அறக்கட்டளையில், அந்தந்த சேதுபதி மன்னர்கள் அளிக்கின்ற திரவியங்களையும், உபையங்களையும்தான் பெற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அந்த மன்னர் முடிசூடும் பொழுது பூரீ இராமநாதசுவாமிக்கு முதன்மையாக வழங்குகிற பட்ட கிராமம் அல்லது பட்டகாணிக்