பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 17ד கையை கோவில் உள்துறைக்கட்டளையில் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். என்பது, மேலும் இந்தச் செப்பேட்டில் இருந்து மன்னரது காலத்திலேயே , சேது நாட்டைத்தவிர மற்றைய மாநிலங்களில் இருந்தும் பூரீ இராமநாதசுவாமிக்கு காணிக்கைகைள் வந்து கொண்டு இருந்தன என்பதும் அவைகள் கோயில் உள்துறைக் கட்டளையில் சேர்க்கப்பட்டு வந்த விவர மும் தெரிய வருகிறது. திருமலை சேதுபதி மன்னர், பூரீஇராமநாதசுவாமி தரிசனத் திற்கு இராமேசுவரம் திருக்கோயிலுக்கு சென்று இருந்த பொழுது அங்கு மன்னரது அறைக்கட்டளையை கவனித்து வந்த காரியக்காரரைப் பற்றிய முறையீட்டைக் கேட்டவுடனேயே, இந்த விளக்க ஆணையை மன்னர் பூரீ இராமநாதசுவாமி சன்னதியிலே வழங்கினார் என்பது (வரி 60) தெரியவருகிறது. தாம்பிர சாசனம் (செப்புபட்டயம்), உபையம் (தருமம்) திரவியம் (பொருள்) அனாதி பூறுவம் (நீண்ட காலம்) பிரகாரம் (வகைப்படி) ஆதினம் (அரசு அமைப்பு) ஆதிசந்திராதித்யம் (சந்திர சூரியர் முதல்) ஆகியவை வடபுலச் சொற்களாக இருந் தாலும், அன்றைய கால தமிழ் உரைநடைக்கு ஏற்ப, செப்பேட்டு வாசகத்தில் பயன்படுத்தப்பட்டு, அவை இயல்பான தமிழ் சொற்கள் போல தோற்றமளிக்கின்றன.