உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 15. (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலைரகுநாத சேதுபதி மன்னர் 2. செப்பேடு பெற்றவர் : இராமநாதபுரம் மாரி துர்க்கை அம்மன் ஆலயம் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன் சகாத்தம் 1581 விகாரி ஆண்டு அர்ப்பசி மீ” (கி.பி. 1659) 4. செப்பேட்டின் பொருள் : மேலே கண்ட ஆலயநித்ய கட்டளைக்கு ஏற்பாடு இந்தச் செப்பேட்டை வழங்கிய திருமலை ரகுநாத சேது பதியின் விருதாவளியாக ஐம்பது விருதுகள் கொடுக்கப்பட் டுள்ளன. அவைகளில் 1. பாண்டிய மண்டல பிரதிஷ்டன். 2. ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும் கஜவேட்டை கண்டருளிய ரஜாதிராஜன். 3. அசுபதி 4. நரபதி 5. கஜபதி 6. தளபதி, அறிவுக்கு அகத்தியன் 8. அன்னசத்திரசோமன், 9. செம்பிவள நாட்டின் பூலோக தேவேந்திரன் 10. செங்காவிக்குடையான் என்பன பத்து புதிய விருதுகளாகும் சத்திய பாஷா அரிச்சந்திரன் என்று முந்தைய செப்பேடுகளில் குறிப்பிட்ட சொல், இந்தச் செப்பேட்டில் சொல்லுக்கு அரிச் சந்திரன் என்று குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மன்னர், இராமநாதபுரம் சீமையில், இராமேசுவரம் திருக்கோயிலுக்கு தலயாத்திரை செல்லும் பயணிகளுக்காக அன்ன சத்திரங்களை