பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் == 205 முதன்முறையாக சேது மார்க்கத்தில் ஆங்காங்கு அமைத்த காரணத்தினால் _அன்னசத்திர கோமான்’ என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் தமது ஆட்சிக் காலத்தில் கொற்றவையின் மூர்த்தங்களான மாரிதுர்க்கை, வனசங்கரி, மலைவளர்காதலி, ராஜராஜேஸ்வரி ஆகிய அம்மன் களுக்கு நான்கு ஆலயங்கள் அமைத்தார். இவை இராமநாதபுரம் கோட்டைக்கு கிழக்கே ராஜமாரியம்மன் ஆலயம், கோட்டைக்கு தெற்கே வனசங்கரி அம்மன் ஆலயம், கோட்டைக்கு உள்ளே ராஜராஜேஸ்வரி ஆலயம் இராமநாதபுரத்திற்கு தென்மேற்கே இருபத்து ஐந்து கல்தொலைவில் மேலச்சிறுபோதில் மலைவளர் காதலி அம்மன் ஆலயம் என்பன. பொதுவாக அம்மனுக்கென அமைக்கப்படும் ஆலயங்கள் வடக்கு நோக்கி இருப்பதுதான் வழக்கம். ஆனால், இராமநாதபுரத்தில் உள்ள மாரிதுர்க்கை ஆலயம் கிழக்கு நோக்கியும், வனசங்கரி ஆலயம் தெற்கு நோக்கியும், அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு ஆலயங் களும் இவ்விதம் நடைமுறைக்கு மாற்றமாக சேதுபதி மன்னர் களால் அமைக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணங்கள் அறியத் தக்கதாக இல்லை. இராமநாதபுரத்திற்கு வடக்கே பெருங் களுர் கிராம ஊரணிக்கரை பிள்ளையார் கோவில் பிள்ளை யாரும், நயினார் கோவில் கிராமத்தில் நாகலிங்க சுவாமியும் கிழக்கு திக்கிற்குப் பதில் மேற்கு நோக்கி வீற்று இருந்து காட்சியளிக்கின்றனர். இராமநாதபுரம் மாரிதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நித்ய கட்டளை மற்றும் திருவிழா சம்பந்தமாக மன்னர் வழங்கிய உரிமை ஆவணமாக இந்தச் செப்பேடு விளங்குகிறது. இந்தச் செப்பேட்டின் வரி 21 இதனை காணியாட்சியாக கூேடித்திர சுவாத்தியமாக பூசாரிக்கு கொடுத்தது’’ எனச் சொல்லுகிறது. இந்தச் செப்பேட்டில் ஆலயத்தின் பூசாரி பெயர் குறிக்கப் படாததால், அந்தப் பணி பரம்பரை பாத்ய மற்றதும் அப் பொழுதைக்கப்பொழுது மன்னரால் நியமனம் செய்யப்படத் தக்கது என்பதும் தெரிகிறது. மேலும் இந்த ஆலயத்தில் அபி ஷேகம், நைவேதனம், திருமாலை, திருவிளக்கு, பரிவட்டம், சோடச உபச்சாரம் ஆகியவை நாள்தோறும் நடைபெற்று வந் ததும் அதற்காக குடிமக்களிடமிருந்தும் அரண்மனையில் இருந் தும் பலவகையான பொருள்கள் வழங்கப்பட்டதும் தெரிய