பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O 3 எஸ். எம். கமால் வருகிறது. மேலும் உப்பு முதல் கர்ப்பூரம் வரை பட்டணத்திலே விற்கப்படுகிற அனைத்துப் பொருட்களிலும் ஒரு பிடி அளவுப் பொருளை வலியப் பெறுவதற்கும், மன்னரது களஞ்சியத்தில் இருந்து கொடுக்கப்படுகிற செலவு நெல்லில் ஒரு கலத்திற்கு ஒருபடி நெல்லும்; அரண்மனை சேமிப்பில் (உக்கிராணம்) இருந்து நாள்தோறும் இரண்டுபடி அரிசியும், ஒரு கோழியும் அஞ்சு முட்டையும் திங்கட்கிழமை தோறும் ஒரு கிடாயும் பெற். றுக் கொள்வதற்கும் இந்தச் செப்பேட்டில் உரிமை அளிக்கப் பட்டுள்ளது. பட்டணம் என்பது இங்கு இராமநாதபுரம் பட்டன மாகும. அத்துடன், வருடக்கட்டளையாக, ஒவ்வொரு குடிமகனும் ஒரு பணமும், சாராயம், கள் இறக்குபவர்கள் பானை ஒன் றுக்கு கால்பணமும், இடைகுடியினர் திருவிளக்கிற்காக வருடத் தில் அரைப்படி நெய்யும், வாணியர்குடி வருடத்திற்கு ஒருபடி நல்ல எண்ணையும் துலுக்கர், சோனகர், பட்டு நூல்காரர், இளம் பஞ்சுக்காரர், வள்ளுவன், பறையன் ஆகியோர் நெசவுத் தறி போட்டால், தறிஒன்றுக்கு ஒரு பணமும், பனையேறி, சாணான்குடி ஒன்றிற்கு முப்பது பல கருக்கட்டியும் பெற்றுக் கொள்ளவும் இந்தச் செப்பேடு ஆலய பூசாரிக்கு உரிமை அளித் துள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவிற்காக, அரண்மனையில் இருந்து, குடை ஐம்பது பொன், ஐம்பது கலநெல், பட்டுப்புடவை, தீபத்திற்கு பத்துப் படி எண்ணை, பத்துக் கோழி, அஞ்சுமுட்டை, இரண்டு கிடா யும் கொடுத்து திருவிழா நடத்தப்பட்டு வந்ததும் தெரிய வருகிறது. இவைதவிர மன்னருக்கு கட்டுப்பட்ட அனைத்துச் சிமைகளில் உள்ள பதினெண் சாதியினரும் குடி ஒன்றுக்கு ஒருபடி தவசமும் துறைமுகத்தில் வலைதோணி (மீன் பிடி தோணி) ஒன்றுக்கு இரண்டு பணமும் முத்துச்சிலாபத்தில் தோணி ஒன்றுக்கு பத்து முத்துச்சிப்பியும் உப்பளத்தில் குடி ஒன்றுக்கு இரண்டு பணமும் பெற்றுக் கொள்வதற்கும் இந்தச் செப்பேடு வகை செய்கிறது. சீமை துறைமுகம் என பெயர் குறிப்பிடாததால், இராமநாதபுரம் சீமையில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் எனறு பொருள் கொள்ள வேண்டியதாக உள்ளது. அன்றைய நிலையில், பாம்பன், இராமேசுவரம், கிழக்கரை, தேவிபட்டினம், தொண்டி ஆகியவை சிறப்பான கடற்கரைகளாக விளங்கின.