பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O8 எஸ். எம். சுமால் - - - - பொழுது இந்த இரு இனத்து மக்களிடமும் கிழக்கு, தென் மேற்கு திக்குகளுக்கு ஒரு வகையான சிறப்பு இருப்பது போலத் தெரிகிறது. முகத்தல் அளவைக் கலன்களுக்கு அரசு முத்திரையிட்டு சரியான அளவைக் கலன்களை மக்களிடையே பயன்படுத்தும் வழக்கம் அப்பொழுதும் இருந்தது என்பதை 'முத்திரைப்படி' எனற சொல் தெரிவிக்கிறது. இவ்விதம் பதினேழாம் நூற்றாண் டின் பிற்பகுதியில் அமைந்திருந்த சேது ராஜ்ய (ம்)த்தின் எல்கைகள், சமூக அமைப்பு, தொழில்கள், அம்மன் வழிபாடு பற்றிய தகவல்களைத் தெரிவிக்கின்ற அரிய செப்பேடாக இது அமைந்துள்ளது.