பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 எஸ். எம். கமால் கி.பி. 1670 ல் இந்தச் செப்பேட்டுன்படி கொத்தங்குளம் கிரா மத்தை தானம் வழங்கினார். கி.பி. 1672 ல் அந்த இடத்தில் தெய்வராய பிள்ளையும் அவர் மனைவியும் கல்லாலும் செங்கல் லாலும் திருக்கோயில் அமைத்து சம்புரோச்சனை சோடச உபகாரம், நித்திய திரிகாலபூஜை, அன்னதானம் உண்டாக்கி' ' (கல்வெட்டு வரிகள் 44-50) னார்கள் என்று தெரிகிறது. அத் துடன், தெய்வராயன் பிள்ளை முதலில் மடத்தை ஏற்படுத்தி இருந்தார் என்பது செப்பேட்டில் இருந்து தெரிகிறது (வரி 18, 20) மேலும், பெருங்கரை கிராமம், ராமநாதசமுத்திரம் என்ற பெயரில் வழங்கியதாகத் தெரிகிறது. சேதுபதி மன்னர் ஆட்சி முறை ஏற்படுவதற்கு முன்னர், இந்தப்பகுதி மதுரை நாயக்க மன்னருக்கு கட்டுப்பட்டு இருந்தபொழுது, சிற்றுார்கள் சமுத்திரம்’ ’ என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தன. நாகநாத சமுத்திரம் (குதக் கோட்டை) கோவிந்தராஜ சமுத்திரம் (முதலூர்) மங்கைநாத சமுத்திரம், கிருஷ்ண சமுத்திரம், உதயண சமுத் திரம் ஆகிய ஊர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கின் றன. மற்றும், வரி 22, 23ல் குறிப்பிடப்பட்டுள்ள பார்த்திப சேகர நல்லூர், இன்று சுருக்கம் பெற்று பாத்திபனூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. இதே ஊர் பின்னர் பட்டநல்லூர் என்றும் பதினெட்டாம் நூற்றாண்டில வழங்கப்பட்டது. பாண்டி நாட்டின் தெற்குக் கோடியான திருநெல்வேலியை இணைக்கும் வர்த்தகச் சாத்துவழி இந்த ஊர் வழியாக சிவகெங்கை, காளை யார்கோலில், தொண்டி, கோட்டைப்பட்டிணம் ஆகியவை களைத் தொட்டுச் சென்றதால் இங்கு ஒரு சுங்கச்சாவடி இயங்கி வந்தது என்பதும் தெரிய வருகிறது. வரி 22ல் 'அருங்குளத்து குளத்துள்வாய்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது குளத்தின் உட் பகுதி என்பது. அதேபோல் முட்டுக்குளம் திருவாங்கி ' என வரி 23ல் குறிப்பிட்டுருப்பது முட்டுக்குளம் குளத்திற்கு நீர் கொண்டு வருகிற குளக்கால் - வட்டார வழக்கு, தான்போகி' ' என்ற இன்னொரு வட்டாரச் சொல்லுக்கு எதிர்மறைச் சொல் இது - நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் கோல் - - 2. கமால், எஸ். எம் - விடுதலைப்போரில் சேதுபதி மன்னர் (1987) பக்கம். 55-56.